அதிமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்!!

0
131

சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அல்லது 16 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சூலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் கனகராஜ்.

இவர் வழக்கம் போல இன்று காலை தனது இல்லத்தில் செய்தித்தாள்கள் வாசித்துக் கொண்டிருக்கையில், திடீரென நெஞ்சைப் பிடித்தவாறு மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.