அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கும் தொகுதி ஒதுக்கீடு.!!

0
127

இன்று  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்றார். மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுகிறது.அதிமுகவுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் பின்னர் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறுகையில்,  மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறுகையில்,மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என்று  புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.