Connect with us

Stunt எதுவும் பண்ணல ஸ்லிப் ஆகி வண்டி தூக்கிடுச்சு…பெரிய உருட்டா உருட்டிய TTF வாசன்..மண்டையில் தட்டி அழைத்து சென்ற போலீஸ்!

Cinema News

Stunt எதுவும் பண்ணல ஸ்லிப் ஆகி வண்டி தூக்கிடுச்சு…பெரிய உருட்டா உருட்டிய TTF வாசன்..மண்டையில் தட்டி அழைத்து சென்ற போலீஸ்!

பைக் ஓட்டும் வீடியோக்களை யூடியூப்பில் பதிவிட்டு அதன் மூலம் சம்பாதித்து வருபவர் டிடிஎப் வாசன்…இவரை சுற்றி நிறைய சர்ச்சை வருவது வழக்கம் தான்…இவருக்கு யூடியூப்பில் 30 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்….

பெரும்பாலும் 2கே கிட்ஸ் தான் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்…அவர்களை தவறாக வழிநடத்தும் வகையில் பைக்கில் சாகசம் செய்து வீடியோ வெளியிடுவதாக டிடிஎப் வாசன் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்தன…இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து அவ்வாறு செய்து வந்தார் வாசன்.

இதனிடையே கடந்த சனிக்கிழமை மஹாராஸ்ட்ராவுக்கு தன்னுடைய நண்பன் அஜீஸ் உடன் சேர்ந்து பைக் ரைடு கிளம்பி உள்ளார் வாசன்…அப்போது காஞ்சிபுரம் அருகே சென்றபோது பைக்கில் வீலிங் செய்ய முயன்றிருக்கிறார் வாசன் அப்போது நிலைதடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி பைக் ஒருபுறமும் இவர் ஒருபுறமும் விழுந்து கிடந்தார்….இதுகுறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது…அதன் காரணமாக இவருக்கு கடும் எதிர்ப்பு நிலவியது…

இதையடுத்து இந்த விபத்தில் வாசனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது…அவர் ஓட்டி வந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஹாயாபுசா பைக்கும் சுக்குறூறாக உடைந்தது.அதனை தொடர்ந்து டிடிஎப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீசார் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது மற்றும் பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இன்று காலை டிடிஎப் வாசனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்…மேலும் அவரின் வாகன் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது…கைதான பின்னர் விபத்துக்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார் வாசன் அதன்படி இது தெரியாம நடந்த ஒரு சின்ன விபத்து தான் என கூறிய வாசன் ஸ்லிப் ஆகி கீழே விழுந்துவிட்டதாக கூறினார்.

இதை கேட்ட நெட்டிசன்கள் என்ன சின்ன விபத்தா என அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்..இவருக்கு 15 நாள் புழல் சிறையில் இருக்க உத்தரவு போடப்பட்டுள்ளது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அவருக்கு நாங்க தான் உயிர் கண்ணீர் மல்க பேசிய மாரிமுத்து அவர்களின் மனைவி!

More in Cinema News

To Top