Connect with us

சூப்பர் ஸ்டாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோடி..! இணையத்தில் பரவும் வித்தியாச தகவல்..! முழு விவரம் இதோ..

Cinema News

சூப்பர் ஸ்டாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோடி..! இணையத்தில் பரவும் வித்தியாச தகவல்..! முழு விவரம் இதோ..

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . இவருக்கு சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது வழங்க போவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது .

அந்த வகையில் இந்திய திரைப்படத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதைப் பெற குடும்பத்துடன் புதுடெல்லிக்குச் சென்று குடியரசு துணைத்தலைவர் கையால் அந்த உயரிய விருதை பெற்றார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் அவரது மருமகனும் நடிகருமான தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருது அதே மேடையில் கொடுக்கப்பட்டது தான் .

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது : இந்த விருதை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் தனது வாழ்நாளில் இந்த விருதை பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார். இருப்பினும், இந்த மைல்கல் தருணத்தில் அவரைக் காண தனது குரு கே.பாலசந்தர் தன்னுடை இல்லை என்றும் வருத்தப்பட்டார்.

இந்த நிகழ்வுக்கு பின் டெல்லியில் பிரதமர் மோடியை சென்று சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது உங்களுக்கு துணை ஜனாதிபதி பதவி வழங்கலாமா என்று சொல்ல ரஜினிக்கு ஒரே இன்ப அதிர்ச்சி ஆகிவிட்டதாம் இதனை தற்போது மெல்ல மெல்ல நெருங்கிய நன்பர்களிடம் சொல்லி மகிழ்ச்சியடைந்து வருகிறாராம் நடிகர் ரஜினிகாந்த் .

இந்நிலையில் இதுபோன்ற சில பல செய்திகள் தொடர்ந்து இணையத்தில் வர அதையும் நம்பி இது உண்மையா என்று தெரியாமலே பலர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர் எனவே நம்பத்தகுந்த தகவல் உரிய நட்சத்திரங்கள் அவர்களே பதிவிடும் வரை அது உண்மையா என்று தெரிந்து பகிர்வது ஆகச்சிறந்தது .

More in Cinema News

To Top