Connect with us

பெண் குழந்தைக்கு தந்தையானார் “பாவம் கணேசன்” நவீன்..!! சாபம் விட்டவங்களுக்கெல்லாம் சரியான பதில்..!!

KPY_Naveen

Cinema News

பெண் குழந்தைக்கு தந்தையானார் “பாவம் கணேசன்” நவீன்..!! சாபம் விட்டவங்களுக்கெல்லாம் சரியான பதில்..!!

தங்களுக்கு குழந்தையே பிறக்காது என பலரும் சாபம் விட்டதாக சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கண்கலங்கிய “பாவம் கணேசன்” நவீனுக்கு, தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.

விஜய் டிவி நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மிமிக்ரி கலைஞராக சின்னத்திரைக்குள் நுழைந்தார் நவீன். தனது திறமையால் பல்வேறு ரசிகர்களை பெற்றுள்ள இவர், பாவம் கணேசன் எனும் சீரியலில் கதாநாயகனாக தற்போது கலக்கி வருகிறார்.

இவருக்கும் கிருஷ்ணகுமாரிக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடக்க இருந்த நிலையில், நவீனின் முதல் மனைவி புகார் அளிக்க, கடைசியில் பல சர்ச்சைகளையும் தாண்டி கிருஷ்ணகுமாரியை கரம் பிடித்தார்.

கடந்த மார்ச் மாதம் நடந்த ஒரு விஜய் டிவி நிகழ்ச்சியில், தங்களுக்கு குழந்தையே பிறக்காது என்றும், சீக்கிரமா பிரிஞ்சிடுவீங்க என்றும் பலர் சாபம் விட்டதாக நவீனும், கிருஷ்ணகுமாரியும் பேசியிருந்தனர். அப்போதுஇ கிருஷ்ணகுமாரி கர்ப்பமாக இருந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது தங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக “பாவம் கணேசன்” நவீன் தெரிவித்துள்ளார். குழந்தையின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, “நீ பூமிக்கு வருவது அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை செல்லமே. எங்களின் இறுதி மூச்சு வரை உன்னை நேசிப்போம்.” என்று பதிவிட்டுள்ளார்.

நவீன் பெண் குழந்தைக்கு தந்தையான நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top