Connect with us

டி20 உலகக் கோப்பை..! இந்தியா VS பாகிஸ்தான் : நிதான ஆட்டத்தால் அரைசதம் அடித்த விராட் கோலி..! பாகிஸ்தானுக்கு 152 ரன்கள் இலக்கு

Featured

டி20 உலகக் கோப்பை..! இந்தியா VS பாகிஸ்தான் : நிதான ஆட்டத்தால் அரைசதம் அடித்த விராட் கோலி..! பாகிஸ்தானுக்கு 152 ரன்கள் இலக்கு

துபாயில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றுக்கான போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் ஓவரில் ரோகித் டக்-அவுட், மூன்றாவது ஓவரில் கே.எல்.ராகுல் 3 ரன்களில் அவுட் . பின்னர் வந்த கேப்டன் கோலி ஆட்டத்தை நிதானமாக ஆடி 45 பந்துகளில் 50 ரன்களை பதிவு செய்தார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் 10 அரை சதங்களை பதிவு செய்த வீரர் என்ற மைல் கல்லை எட்டியுள்ளார் விராட் கோலி .

மறுபக்கம் சூரியகுமார் யாதவ் 11 ரன்களிலும், பண்ட் 30 பந்துகளில் 39 ரன்களிலும், ஜடேஜா 13 ரன்களிலும் அவுட்டாகினர். இதில் பண்ட் மற்றும் கோலி 53 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜடேஜாவுடன் 41 ரன்களுக்கு கோலி பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

பின்னர் கோலி 49 பந்துகளில் 57 ரன்களை எடுத்து அவுட்டானார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களத்தில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இன்று நடக்கும் இந்த பரபரப்பான போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top