Connect with us

டி20 உலகக் கோப்பை..! (இந்தியா VS பாகிஸ்தான் ) டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு..! இரு அணிகளின் ஆடும் லெவன் விவரம் இதோ..!

Featured

டி20 உலகக் கோப்பை..! (இந்தியா VS பாகிஸ்தான் ) டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு..! இரு அணிகளின் ஆடும் லெவன் விவரம் இதோ..!

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று உலகில் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்திய நேரப்படி சரியாக இரவு 7.30 மணிக்கு துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் இந்தியாவுக்கு டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்கவேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் களமிறங்க உள்ளனர் .

image


இந்தியா!

ரோகித் ஷர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, வருண் சகரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

பாகிஸ்தான்!

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஹாரிஸ் ரவுஃப், ஷஹீன் அஃப்ரிடி.

டி20 போட்டி என்றாலே விறுவிறுப்பும் பரபரப்பும் தான் இதில் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதில் கடைசி ஓவர் வரை பரபரப்பை ஏற்படுத்தும் இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான இன்றைய போட்டி உச்சகட்ட பரபரப்பாக இருக்கும் என்பதில் மறுப்பு கிடையாது .

இந்நிலையில் இன்று நடக்கும் இந்த பரபரப்பான போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top