Connect with us

டி20 உலகக் கோப்பை..! இந்தியாவை முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியில் வென்று சாதனை படைத்தது பாகிஸ்தான்..!

Featured

டி20 உலகக் கோப்பை..! இந்தியாவை முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியில் வென்று சாதனை படைத்தது பாகிஸ்தான்..!

துபாயில் உள்ள பிரபல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கான போட்டியில் நேற்று பலப்பரீட்சை நடத்தின .

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது.

பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான். அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களின் பந்து வீச்சை பொருட்படுத்தாமல் அடித்து ஆடி, துவம்சம் செய்தனர்.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் 40 பந்துகளில் 50 ரன்களை பதிவு செய்திருந்தார். மறுபக்கம் ரிஸ்வான் 41 பந்துகளில் அரை சதம் பதிவு செய்தார். இருவரும் இறுதி வரை அவுட்டாகாமல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் .

இறுதியில் 10 விக்கெட் வித்திகயாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் இந்த வெற்றி உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக கிடைத்துள்ள முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top