Connect with us

பா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட சென்சார் சான்றிதழ்..! வெளியான லேட்டஸ்ட் தகவல்…

Celebrities

பா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட சென்சார் சான்றிதழ்..! வெளியான லேட்டஸ்ட் தகவல்…

அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பா. ரஞ்சித் . அதன் பின் கார்த்தியை வைத்து அவர் எடுத்த மெட்ராஸ் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பினை தந்தது. இவருக்கென தனி பாணியுடனே படங்களை இயக்கி வந்தார் . இந்த படத்தின் வெற்றியின் மூலம் இவருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கம் வாய்ப்பு வந்தது. அவரை வைத்து கபாலி மற்றும் காலா என அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்தார்.

இன்னும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இவர் தயாரிக்கும் படங்களுக்கும் சரி இயக்கும் படங்களும் சரி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இவரது இயக்கத்தில் ஆர்யாவின் நடிப்பில் அண்மையில் வெளியான சார்ப்பட்டா பரம்பரை படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து அவர் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ஜெயராம் மகன் காளிதாஸ், சார்பட்டா ஹீரோயின் துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.

இப்படம் வருகிற 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ஒரு சில காட்சிகளுக்காக இப்படத்திற்கு ஏ சான்றிழ் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top