Connect with us

பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் குறித்த செம அப்டேட்..!

Celebrities

பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் குறித்த செம அப்டேட்..!

தமிழ் திரையுலகில் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் நம்பிக்கை அளிக்கும் நடிகராக பெயர் உருமாறியவர் நடிகர் தினேஷ். அடுத்தடுத்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நல்ல கதைகள் என்பதால் ரசிகர்கள் இவரின் படம் என்றாலே சற்று அண்ணார்ந்து அது ஒரு சிறந்த படைப்பாக தான் இருக்கும் என நம்புகின்றனர்.

அந்தவகையில் ரசிகர்களின் நம்பிக்கை உடையாத வகையில் விசாரணை, குக்கூ, ஒரு நாள் கூத்து, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, அண்ணனுக்கு ஜே என இவர் நடித்த அடுக்கடுக்கான படங்கள் அனைத்தும் தனி கவனம் பெற்றன .

பல நல்ல திறமைகளை நல்ல கதைகளில் நடிக்க வைத்து புகழ் பெற செய்பவர் புரட்சி இயக்குனர் பா ரஞ்சித். அப்படி தனது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த இயக்குனர்களில் மாரி செல்வராஜும் ஒருவர். பரியேறும் பெருமாள், கர்ணன் என தரமான படைப்புகளை கொடுத்து ரசிங்கர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர் .

இந்நிலையில் தற்போது நீலம் தயாரிப்பில் பல நல்ல படங்கள் வெளியாக உள்ள நிலையில். அவற்றில் ஒன்று தான் பா ரஞ்சித்தின் அசோசியேட் இயக்குனர் இயக்கும் படம்.

இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் கதையின் நாயகன் என்றும், அவரின் அம்மாவாக மூத்த நடிகை ஊர்வசி நடிக்கிறார் என்ற தகவல் திரை துறை வற்றங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது . மேலும் இதன் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் விரைவில் இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top