Connect with us

மீண்டும் இணையும் மெகா கூட்டணி ரஜினிகாந்தும் இவரும் சேர்ந்து பண்ண போகும் புதிய படம்..

Cinema News

மீண்டும் இணையும் மெகா கூட்டணி ரஜினிகாந்தும் இவரும் சேர்ந்து பண்ண போகும் புதிய படம்..

சந்திரமுகி 2 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சந்திரமுகியின் (2005) தொடர்ச்சி என்று கூறப்படுகிறது, இது பழம்பெரும் திரைப்படமான மணிசித்திரத்தாழு (1993) ரீமேக் ஆகும்.

சந்திரமுகி படத்தை இயக்கிய பி.வாசு மீண்டும் இயக்குநராக வரவுள்ளார், மேலும் வைகை புயல் வடிவேலு தனது கேரக்டரில் மீண்டும் நடிக்க உள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான நடிகர்,அவர் படத்தின் வேலைகளை தொடங்குவதற்கு முன்பு அவரது ஆசிர்வாதம் பெற்றார். சந்திப்புக்குப் பிறகு படங்களைப் பகிர்ந்த லாரன்ஸ்,வணக்கம் நண்பர்களே ரசிகர்களே,சந்திரமுகி 2 படப்பிடிப்பு மைசூரில் எனது தலைவர் மற்றும் குருவின் ரஜினிகாந்த் ஆசியுடன் தொடங்குகிறது! உங்கள் எல்லா வாழ்த்துக்களும் எனக்குத் தேவை!என்று சொல்லியிருந்தார்.

ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன் பின்னர் அவர் நடிக்கும் படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினிக்கு ரிவிட் வைத்த பி.வாசு! பழிக்கு பழிவாங்கி சந்தோஷம்: சந்திரமுகி 2  வரும் ஆனா வராது! | Director P vasu Revenge Rajinikanth

ரஜினியின் அடுத்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது சம்மந்தமாக ரஜினி, அவரிடம் கதை கேட்டதாகவும் ஆனால் அந்த கதையில் திருப்தி இல்லாததால் அந்த கதையில் நடிக்க மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது ஒப்பந்தமாகி இருக்கும் இரண்டு படங்களையும் முடித்த பின்னர் பி வாசு இயக்கத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக ஏற்கனவே பி வாசு ரஜினிக்கு ஒரு கதை சொல்லி அதற்கு சம்மதம் வாங்கி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்கள் கூட்டணியில் உருவான சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெளியே போ..நடிகர் சித்தார்த் Press மீட்டிற்கு அத்து மீறி நுழைந்த கட்சி தொண்டர்கள்…எழுந்தது சர்ச்சை!

More in Cinema News

To Top