Connect with us

அஜித்தின் வெறித்தனமான நடிப்பில் வெளியான துணிவு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Cinema News

அஜித்தின் வெறித்தனமான நடிப்பில் வெளியான துணிவு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் எச் வினோத்தின் காட்டுத்தனமான இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான துணிவு படம் திரையரங்குகளில் நல்ல வசூல் வேட்டை செய்து கொண்டிருக்கிறது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து இப்படம் வெளியாக மக்களுக்கு படத்தின் மேல் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

அந்தவகையில் கடந்த 11ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியானது .போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது.

இப்படம் வங்கி பற்றிய பல முக்கிய விஷயங்களை மக்களுக்கு தெள்ளத்தெளிவாக கூறியிருக்கிறது, படத்தை பார்த்தவர்களும் நானும் வங்கி கணக்கினால் சில பாதிப்புகளை சந்தித்துள்ளேன் என கமெண்ட் செய்தும் வந்தனர் .

இந்நிலையில் துணிவு படம் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top