Connect with us

வாரிசு படத்தில் பிரபுவுடன் விஜய் நடித்த காட்சி…மீண்டும் லீக் …ட்ரெண்டாகும் வீடியோ

Cinema News

வாரிசு படத்தில் பிரபுவுடன் விஜய் நடித்த காட்சி…மீண்டும் லீக் …ட்ரெண்டாகும் வீடியோ

விஜய் தற்போது இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளியுடன் இணைந்து ‘வாரிசு’ படத்தில் பணிபுரிந்து வருகிறார். இப்படத்தின் அடுத்த ஷெட்யூலிற்காக படக்குழு விசாகப்பட்டினத்தில் முகாமிட்டுள்ளது. இதில் விஜய் சம்பந்தப்பட்ட முக்கிய பகுதிகள் படமாக்கப்பட இருக்கின்றன. படப்பிடிப்பில் விஜய் ஈடுபட்டிருக்கும் போது, ​அவரது ரசிகர்களில் ஒருவர் அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். தற்போது அது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. விஜய்யின் படப்பிடிப்பில் இருந்து படங்கள் கசிவது இது முதல் முறையல்ல. படப்பிடிப்பு தளங்களில் பல கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், ‘வாரிசு’ படத்தின் வீடியோ தொடர்ந்து கசிந்து வருகின்றன.

ரொமான்ஸ், காமெடி, ஆக்‌ஷன் மற்றும் செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக ‘வாரிசு’ இருக்கும் எனத் தெரிகிறது. மேலும் செட்டில் இருந்து கசிந்த பல படங்களில் விஜய் பல்வேறு வகையான உடைகளில் காணப்படுகிறார். ‘வாரிசு’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் செப்டம்பரில் முடிவடையும் என்றும், படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top