Connect with us

அடுத்த சில தினங்களுக்கு வெளுத்து கட்டப்போகும் கனமழை…வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Featured

அடுத்த சில தினங்களுக்கு வெளுத்து கட்டப்போகும் கனமழை…வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 24ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வெளியிட்டுள்ளது.

அதன் படி செப் 23 முதல் 26 வரை விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது .

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டு உள்ளது .

More in Featured

To Top