Connect with us

நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 2019 முதல் தொடர்ந்து தோல்வி தான்.. இந்திய அணிக்கு என்னாச்சு..!!

India match

நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 2019 முதல் தொடர்ந்து தோல்வி தான்.. இந்திய அணிக்கு என்னாச்சு..!!

டி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்ததைப் போலவே, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 307 ரன்கள் இலக்கை எளிதாக எட்டி இந்திய பந்துவீச்சுக்கு மீண்டும் ஒரு முறை சவுக்கடி கொடுத்துள்ளது.

இன்று நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடந்த போட்டியில், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோரின் அரைசதங்களுக்குப் பிறகு, வாஷிங்டன் சுந்தரின் தாமதமான பிளிட்ஸ், இந்தியா 306 ரன்களை எடுக்க உதவியது. இந்தியா ஜெயிக்க இந்த ஸ்கோர் போதும் என அனைவரும் நினைக்க, நியூசிலாந்து அணி அப்படி நினைக்கவில்லை.

முன்னதாக டி20 உலகக்கோப்பையின் அரையிறுதியில், அடிலெய்டில் இந்தியா 20 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து வெறும் 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது. குடி போன்ற அதிர்ச்சியைத் தான் இன்று நியூஸிலாந்தும் இந்தியாவிற்கு கொடுத்தது.

ஆரம்பத்தில் சரசரவென 3 விக்கெட்டுகளை இழந்தாலும், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டாம் லாதம் மற்றும் கேன் வில்லியம்சன் பார்ட்னர்ஷிப்பில், 164 பந்துகளில் 221 ரன்கள் என்ற சாதனையுடன் 307 ரன்கள் இலக்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 2.5 ஓவர்கள் மீதமிருக்கையிலேயே எட்டியது.

இதன் மூலம் 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் தொடங்கி, ஒருநாள் போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா பெற்ற 5வது தொடர் தோல்வியாக இது மாறியுள்ளது. முன்னதாக பிப்ரவரி 2020 இல் ஒருநாள் தொடரை 3-0 என இழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய பந்துவீசசு சொதப்பினாலும், நீண்ட நாட்களாக வாய்ப்பை எதிர்கொண்டு காத்திருந்த உம்ரான் மாலிக் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, எதிர்காலத்தில் இந்தியாவின் சிறந்த பவுலர்களில் ஒருவராக உருவெடுப்பார் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், அடுத்த போட்டி, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in India match

To Top