பெட்ரோமேக்ஸ் லைட்டை ஒரு தடவைதான் உடைச்சேன்-பழைய காமெடியை நினைவு கூறும் செந்தில்

0
343

நடிகர் செந்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி கொடுக்கும் போது அவரிடம் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் வரும் பெட்ரோமேக்ஸ் லைட் காமெடியில் பெட்ரோமேக்ஸ் லைட்டை எத்தனை தடவை உடைதீர்கள் என்று கேட்டதற்கு…

‘வைதேகி காத்திருந்தாள்’ படத்துல அந்த பெட்ரோமேக்ஸ் லைட் சீனை டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் சார் எடுத்துக்கிட்டிருந்தார். அந்த சீன்ல ‘எப்படிண்ணே இது எரியுது’ன்னு பெட்ரோமேக்ஸ் லைட்டைப் புடிச்சு அழுத்துவேன். அது உடைஞ்சிரும். அந்தக் காட்சியை, ஒரே டேக்ல எடுத்தோம். ஒரே தடவைதான் உடைச்சேன்.

இன்னிக்கு சினிமாவை டிஜிட்டல்ல எடுக்கிறோம். அப்பல்லாம் பிலிம்ரோல்லதான் எடுக்கணும். அதுக்கு ஏகப்பட்ட செலவாயிரும். படத்தோட தயாரிப்பாளர்கள் சிலபேரு, படம் ஷூட்டிங் எடுக்கறப்போ, எவ்ளோ பிலிம் வேஸ்ட் பண்றாங்க, யார்யாரெல்லாம் எவ்ளோ டேக் வாங்குறாங்கன்னு பயத்தோடயும் டென்ஷனோடயும் பாத்துக்கிட்டே இருப்பாங்க. என்று கூறினார்.