Connect with us

பார்சிலோனாவில் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் வெக்கேஷன் புகைப்படங்கள்…

Cinema News

பார்சிலோனாவில் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் வெக்கேஷன் புகைப்படங்கள்…

லையாளத்தில் சூப்பர் ஹிட்டான லூசிஃபர் திரைப்படத்தின் ரீமேக்காக தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து காட்ஃபாதர் திரைப்படத்தில் நடித்து வரும் நயன்தாரா பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்திவிராஜ் உடன் இணைந்து நடித்திருக்கும் GOLD திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 19ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. அடுத்ததாக ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக CONNECT திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை நயன்தாரா தொடர்ந்து தனது திரைப்பயணத்தில் 75வது திரைப்படமாக தயாராகும் புதிய படத்திலும் நடிக்கிறார். இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் விடுமுறையை கொண்டாட சில தினங்களுக்கு முன்பு பார்சிலோனா புறப்பட்டுச் சென்றனர்.

இந்த நிலையில் சற்று முன் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்சிலோனாவில் இருக்கும் நயன்தாராவின் புகைப்படங்களைபதிவு செய்துள்ளார். ’டல்லடிக்கும் ரத்தினமே மினுமினுக்கும் முத்தாரமே’ என்ற கேப்ஷனுடன் அவர் பதிவு செய்துள்ள இந்த புகைப்படத்தில் நயன்தாரா செம கிளாமர் உள்ளார். பார்சிலோனாவில் பளபளவென நயன்தாரா இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top