Connect with us

சத்தமின்றி இரண்டு மெகா பட்ஜெட் படங்களில் கமிட்டான நயன்தாரா..! இனி மேடம் செம பிஸி தான் போங்க..

Cinema News

சத்தமின்றி இரண்டு மெகா பட்ஜெட் படங்களில் கமிட்டான நயன்தாரா..! இனி மேடம் செம பிஸி தான் போங்க..

இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நாயகிகளில் ஒருவராகவும் தென்னிந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டராகவும் வலம் வருபவர் நடிகை நயன்தாரா . இவர் திருமணத்திற்கு பிறகு ஏகப்பட்ட கண்டிசன்களுடன் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் .

அந்தவகையில் திருமணம் முடிந்த சில மாதங்களில் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு ஷாரூக்கானின் ஜவான் படத்தில் நடிக்க தொடங்கினார். அட்லீ இயக்கி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . அதே வேளையில் நயன்தாராவின் இறைவன் படமும் ரிலீஸுக்கு தயாராகி விட்டது .

பாலிவுட் பாஷா ஷாருக்கானின் மிரட்டலான நடிப்பில் கடந்த மாத இறுதியில் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சக்கை போடு போட்டு வருகிறது .விரைவில் அந்த படம் 1000 கோடி மைல்கல்லை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஷாருக் மற்றும் நயன் நடிப்பில் உருவாக்கி வரும் ஜவான் படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அரண் போல் எழுந்திருக்கிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த படத்தை முடித்த பிறகு அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவளோடு எதிர்பார்த்து காத்திருந்த இருந்த நிலையில் தற்போது அவர் புதிதாக இரண்டு மெகா பட்ஜெட் படங்களில் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் எனவும், அதே நேரத்தில் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் நடிக்க இருக்கிறார் எனவும் தகவல் பரவி வருகிறது.

ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான தனிஒருவன் படம் மிகப்பெரிய ஹிட் என்பதால் அதன் இரண்டாம் பாகம் மீது தற்போது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top