Connect with us

இரண்டு குட்டிஸுடன் பொங்கலோ பொங்கல் கொண்டாடிய விக்கி மற்றும் நயன்தாரா..!!

Cinema News

இரண்டு குட்டிஸுடன் பொங்கலோ பொங்கல் கொண்டாடிய விக்கி மற்றும் நயன்தாரா..!!

‘போடா போடி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்,அவர் கடைசியாக இயக்கியிருந்த “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகி இருந்தது.மக்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் நடிப்பில் AK62 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார்.இது பெரிய பட்ஜெட் படமாம்..

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

சில மாதங்களுக்கு முன் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன், பொங்கல் பண்டிகையை தனது வீட்டில் சிவபெருமான், பார்வதி, முருகன், விநாயகர் இருக்கிற சாமி படத்தை வைத்து பூஜை செய்து அதனருகில் மனைவி நயன்தாரா, குழந்தைகள் உயிர் & உலகத்துடன் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

பொங்கலோ பொங்கல் என தலைப்பிட்டு,அழகான புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் அது வைரலாகி வருகிறது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top