Connect with us

“நாயகன் மீண்டும் வரார்..!கமல் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் ரீ ரிலீஸ் சம்பவம்..”

Cinema News

“நாயகன் மீண்டும் வரார்..!கமல் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் ரீ ரிலீஸ் சம்பவம்..”

இன்று gangster படத்தில் ஒரு படம் மிக பெரிய இடத்தை பெற்றுள்ளது…அதாவது கமல் நடிப்பில் வெளியாக ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் ‘நாயகன்’ இத்திரைப்படம் அவரது பிறந்த நாளையொட்டி வரும் நவம்பர் 3-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இப்படத்தை ரசிகர்கள் நிறைய கொண்டாடுவது வழக்கம் ஆகும்.

கடந்த 1987-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நாயகன்’. இளையராஜா இசையமைதிருந்த இப்படத்தை முகுந்தன் ஸ்ரீனிவாசன் தயாரித்திருந்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு மேற்கொண்டிருந்தார்.

லெனின், வி.டி.விஜயன் இருவரும் படத்தொகுப்பு செய்திருந்தனர். சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி, கார்த்திகா, விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் பலரும் இப்படத்திற்கு தூணாக இருந்தார்.

மும்பையை பின்னணியாக கொண்ட படத்தில் வேலு நாயக்கர் கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை கமல் வெளிப்படுத்தியிருந்தார்…

இந்தப்படத்துக்காக கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது…அதனை போல ஒளிப்பதிவாளர் பிசிஸ்ரீராம், கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில் கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி நாயகன் படம் நவம்பர் 3-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதனால் ரீ ரிலீஸ் பெரிய சம்பவமாக இருக்க போகிறது என சொல்லப்பட்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "Captain Miller படத்தின் அடுத்த அப்டேட்டை வெளிட்ட படக்குழு! லைகாவுக்கு சென்றது தனுஷின் அடுத்த படம்!"

More in Cinema News

To Top