Connect with us

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று வீட்டில் தேசியக் கொடி ஏற்றிய ரஜினிகாந்த், விஜய் , மோகன் லால்…வீடியோ

Cinema News

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று வீட்டில் தேசியக் கொடி ஏற்றிய ரஜினிகாந்த், விஜய் , மோகன் லால்…வீடியோ

நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையில் ஒவ்வொருவர் வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.இதன் அடிப்படையில் பல்வேறு தரப்பினர் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், அனைவரும் தங்களது வீட்டில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், எத்தனையோ பேர் அவர்களோட உயிரை தியாகம் பண்ணிருக்காங்க.

அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வரும் 15ம்தேதி சாதி மத கட்சி வேறுபாடு இல்லாமல் நாம எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு தேசியக் கொடியைக் கட்டி பெருமைப்படுவோம். என்று கூறியிருந்தார்.

ரஜினியின் வீட்டைத் தொடர்ந்து ஈ.சி.ஆர் பனையூரில் அமைந்திருக்கும் விஜய்யின் வீட்டிலும் தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட்டுள்ளார்கள். இதனை அவர்களது ரசிகர்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

நடிகர் மோகன்லால் கொச்சியில் உள்ள தனது வீட்டில் நேற்று தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று எனது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளேன். ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். இவ்வாறு தேசியக் கொடியை ஏற்றுவது நம்முடைய நாட்டுப்பற்றை அதிகரிக்கச் செய்யும்’ என்று கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top