Connect with us

நாய் சேகருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழகத்தின் யார்கர் கிங்..!

Celebrities

நாய் சேகருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழகத்தின் யார்கர் கிங்..!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சதிஷ் ஹீரோவாக நடிக்கும் ‘நாய் சேகர்’ படத்திற்கு கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மட்டுமே இதுவரை காணப்பட்ட நடிகர் சதீஷ் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் சதீஷ் ’நாய் சேகர்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஹீரோயினாக ‘குக் வித் கோமாளி’ புகழ் பவித்ரா லக்‌ஷ்மி நடிக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடியும் தருவாயில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டிருந்தது.

image

இந்நிலையில் சதீஷ் முதல் முறையாக ஹீரோவாக நடிப்பதால் கிரிக்கெட் வீரர் நடராஜன் “வாழ்த்துகள் சதீஷ் அண்ணா” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நடராஜன், சிவகார்த்திகேயன், சதீஷ் மூவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது இணையவாசிகள் அனைவர்க்கும் தெரிந்த ஒன்ரே . வீடியோ காலிலும் அடிக்கடி பேசிக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

Continue Reading
Advertisement
You may also like...

More in Celebrities

To Top