Connect with us

நாகர்ஜுனாவின் பான் இந்தியா படம் ‘இரட்சன் : தி கோஸ்ட்’… கவனம் ஈர்க்கும் டிரைலர் இதோ

Cinema News

நாகர்ஜுனாவின் பான் இந்தியா படம் ‘இரட்சன் : தி கோஸ்ட்’… கவனம் ஈர்க்கும் டிரைலர் இதோ

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகர்ஜுனா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘இரட்சன் : தி கோஸ்ட்’. இப்படத்தை பிரவீன் சட்டாரு இயக்கி உள்ளார். இப்படத்தில் நாகர்ஜுனாவுடன் சோனல் சவுகான், அனிகா சுரேந்திரன், மனிஷ் சவுத்ரி, ரவி வர்மா, ஸ்ரீகாந்த் ஐய்யனார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

பரத் மற்றும் சவுரப் இசையமைத்துள்ள இப்படத்திற்கு முகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற அக்டோபர் 5-ந் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது. தெலுங்கு படமான இது தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ஓய்வு பெற்ற ரா ஏஜண்ட் விக்ரம் என்ற கேரக்டரில் நடித்துள்ள நாகார்ஜூனாவுக்கு அவரது தங்கையிடம் இருந்து ஒருநாள் போன் வருகிறது. அதில் தனது மகள் ஆபத்தில் இருப்பதாகவும், அவரை காப்பாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றார். தங்கை மகளை காப்பாற்ற களமிறங்கும் விக்ரமுக்கு என்ன சவால்கள் காத்திருந்தன என்பது தான் இந்த படத்தின் கதை. விக்ரமின் தங்கை மகளாக அனிகா சுரேந்திரன் நடித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஜயகாந்தை சந்திப்பாரா நடிகர் விஜய்..உதவியவரை விட்டுக்கொடுக்காமல் நேரில் சென்று சந்திப்பாரா ??

More in Cinema News

To Top