Connect with us

நாக சைதன்யாவுக்கு விரைவில் டும் டும் டும்…எல்லா பிரச்சனையும் ஓவர் போல!

Cinema News

நாக சைதன்யாவுக்கு விரைவில் டும் டும் டும்…எல்லா பிரச்சனையும் ஓவர் போல!

கடந்த 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் திரை உலகில் வெளியான ஜோஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் அறிமுகமானவர்தான் நாக சைதன்யா அவர்கள்..அவருக்கு வந்ததில் இருந்து ரசிகர்கள் அதிகம் தான்….தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சைதன்யாவின் ஜோடியாக நடித்து திரை உலகில் களமிறங்கியவர் தான் பிரபல நடிகை சமந்தா.அந்த திரைப்படம் தான் இவர்களுடைய காதல் துளிர்விட காரணமாக இருந்தது என்றால் அது உண்மை..அதன் பின் பல சர்ச்சையில் மாட்டியிருந்தார்.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும், கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்…ஆனால் அதன் பிறகு அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் கடந்த 2021ம் ஆண்டு பிரிந்தது குறிப்பிடத்தக்கது அது பலருக்கும் அதிர்ச்சி தந்தது.

இந்த சூழல் நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துலிபாவுடன் காதலில் உள்ளார் என்றும், தன்னுடைய புது வீட்டிற்கு அவரை அழைத்து தனது பெற்றோரிடம் அவரை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது..

அது பல மாதங்களாக நடந்து வருகிறதாம் ஆனால் இந்த தகவலை நாக சைதன்யாவும், அவருடைய குடும்பத்தாரும் மறுத்துள்ள நிலையில் இந்த செய்தி தற்பொழுது தெலுங்கு திரை உலகை தீயாக பரவி வருகிறது மேலும் இது பற்றி கேள்விப்பட்ட சமந்தா அவரை பிரிந்துவிட்ட காரணத்தினால் அதை பெரிய அளவில் பொறுப்பெடுத்த வில்லை என்று கூறப்படுகிறது…விரைவில் சோபிதாவுடன் திருமணம் என தகவல் மீண்டும் வர துவங்கியுள்ளது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "தங்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி! சாதித்து காட்டிய வீராங்கனைகள்!"

More in Cinema News

To Top