Connect with us

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் முரளி விஜய்…

Featured

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் முரளி விஜய்…

இந்திய அணிக்காக கடந்த 2008 முதல் 61 டெஸ்டுகள், 17 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியவர் முரளி விஜய். டெஸ்டில் 12 சதங்கள், 15 அரை சதங்கள் என இதுவரை 3982 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணிக்காகக் கடைசியாக 2018-ல் பெர்த் டெஸ்டில் முரளி விஜய் விளையாடினார்.

தமிழ்நாடு அணிக்காகக் கடைசியாக 2019-ம் ஆண்டிலும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2020-ம் ஆண்டிலும் அவர் விளையாடினார். பின்னர் அவர் எந்த ஒரு தொழில்முறை கிரிக்கெட்டி போட்டியிலும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள முரளி விஜய், உலகளவில் புதிய வாய்ப்புகளைத் தேடிச் செல்வதாகக் கூறியுள்ளார். இதையடுத்து உலக நாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.

2013 முதல் 2018 வரை இந்திய டெஸ்ட் அணியில் மிக முக்கிய வீரராக இருந்து வந்தவர் முரளி விஜய். டிசம்பர் 2013 முதல் ஜனவரி 2015 வரை இந்திய அணி – தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியபோது அதிக ரன்கள் எடுத்தவர்களில் 2-வது பேட்டராக இருந்தார் முரளி விஜய்.

ஐபிஎல் போட்டியில் 106 ஆட்டங்களில் முரளி விஜய் விளையாடியுள்ளார். டெல்லி டேர்டெவில்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் கேப்டனாகச் சில காலம் செயல்பட்டுள்ளார். சிஎஸ்கே அணி 2010, 2011-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்றபோது அந்த அணியின் மிக முக்கிய வீரராக இருந்தார்.

பின்னர் பெங்களூரு அணிக்கு எதிரான 2011 ஐபிஎல் இறுதிச்சுற்றில் 52 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார் முரளி விஜய். ஐபிஎல் போட்டியில் 2 சதங்கள், 13 அரை சதங்களுடன் 2619 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தாலும் இன்னும் சில நாட்களில் அல்ல சில மாதங்களில் வேறு ஒரு நாட்டின் முக்கிய வீரராக அவரை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .இந்நிலையில் ஓய்வை அறிவித்துள்ள அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top