அரவிந்த் சாமி, சித்தார்த், ரோபோ ஷங்கர் இவர்களின் குரல் வென்றதா!!! “தி லயன் கிங்” படத்தின் திரைவிமர்சனம்…

0
494

திரைப்படம் : தி லயன் கிங்
நடிகர்கள் : கிராபிக்ஸ்
இசை : ஹான்ஸ் ஜிம்மர்
ஒளிப்பதிவு : R குத்தா
இயக்கம் : ஜான் பாவரெசு
தயாரிப்பு : க்ரேன் கில்கிறிஸ்ட்

நாம் அனைவரும் சிறு வயதில் கண்டுகளித்த தி லயன் கிங் திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் நம் அனைவருக்கும் பரீட்சியமான தமிழ் நடிகர்களின் பின்னணி குரலுடன் திரைக்கு இன்று முதல் வந்துள்ளது. படம் எப்படி இருக்கு என்பதனை இங்கு காணலாம்.

ஹாலிவுட் திரைப்படங்களை பொறுத்தவரையில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு குறையே இருக்காது. நிஜ வடிவை போன்றே தத்ரூபமாக இருக்கும். அந்த வகையில் இந்த திரைப்படத்தில் முஃபாஸா என்ற சிங்கம் அந்த காற்றுக்கு ராஜாவாக இருக்கிறது. அதன் குட்டி மகன் தான் சிம்பா. அதன் தோழியாக வருவது லாலா.

இதில் முஃபாஸா தன் மகன் சிம்பா இந்த காட்டிற்கு இளவரசனாக வரவேண்டும் என நினைக்கிறார். அதற்காக சிம்புவுக்கு பல தந்திரங்கள் மற்றும் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என அனைத்தையும் கற்று கொடுக்கிறார். முஃபாஸா-வின் ஆட்சிக்கு கட்டுப்பட்டு காட்டில் உள்ள அணைத்து மிருகங்கள் மற்றும் பறவைகளும் வசித்து வருகின்றன.

ஆனால் மயான பூமியில் பெரும் அச்சுறுத்தல் ஒன்று இருக்கிறது. சிம்பாவின் வாழ்க்கைசந்தோசமாக போகிக்கொண்டிருக்கிறது. அப்போது திடீரென சிம்பா ஒரு பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறது. அதனை காப்பாற்ற வரும் முஃபாஸா-வும் அதில் மாட்டிக்கொள்கிறது.

இதன் முடிவில் முஃபாஸா இறந்துவிடுகிறது. தன் தந்தையின் இறப்புக்கு தான் காரணமாகிவிட்டதாக கருதி சிம்பா மனமுடைந்து போகி விடுகிறது. அதோடு மட்டுமல்லாமல் புதிய இடத்திற்கும் சென்று விடுகிறது. அப்போது முஃபாஸா இல்லாததன் காரணத்தினால் காட்டில் ஆட்சி மாறிவிடுகிறது.

இறுதியில் முஃபாஸா-வின் மரணத்திற்கு யார் காரணம். சிம்பா எங்கு போனது. முஃபாஸா-வின் ஆசைப்படியே சிம்பா ராஜாவானதா என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் பிளஸ்:
இந்த படத்தினை பொறுத்தவரையில் தமிழ் படங்களை போல் கிராபிஸ்ல் சொதப்பாமல் பார்ப்பவர்களுக்கு நிஜ விலங்குகளை பார்ப்பது போலவே படமெடுத்திருப்பது பெரிய பலம்.
படத்திற்கு தமிழில் முன்னணி நாயகர்களான அரவிந்த் சாமி, சித்தார்த், ரோபோ ஷங்கர், மயில் சாமி என சரியான குரல்களை தேர்ந்தெடுத்தது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் ரோபோ ஷங்கர், மனோ பாலா இவர்களின் காமெடி .
குழந்தைகளை கவரும் பாணியில் சிறப்பாக எடுக்கப்பட்டது.

படத்தின் மைனஸ்:
படத்தினை பார்ப்பவர்களுக்கு தெரியும் எல்லாம் நல்ல போக இண்டெர்வெல் வரும் வேளையில் மட்டும் சற்று தடுமாறிவிட்டனர்.

மத்தபடி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண்டுகளிக்க சிறந்த திரைப்படம் தி லயன் கிங்.

படத்தின் சினிமாமேடை ரேட்டிங்: 3.25/5