விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சிந்துபாத் படம் எப்படி இருக்கு!!! படத்தின் திரைவிமர்சனம்…

0
564

திரைப்படம் : கொலைகாரன்
நடிகர்கள் : விஜய் சேதுபதி, அஞ்சலி,விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, ஜார்ஜ் மரியான் மற்றும் பலர்.
இசை : யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு : விஜய் கார்த்திக் கண்ணன்
இயக்கம் : அருண் குமார்
தயாரிப்பு : ராஜராஜன்

சிந்துபாத் கதை நம் அனைவருக்கும் தெரியும். அதாவது தன மனைவியை தேடி பல மலை, காடு, கடல் கடந்து வரும் எதிரிகளையெல்லாம் துவம்சம் செய்து அவளை மீட்பதே இந்த படத்தின் கதை.

தமிழ்நாட்டின் தென்காசி நகருக்கு அருகில் உள்ள சிறிய ஊரில் திரு ( விஜய் சேதுபதி) மற்றும் அவரின் உடன் பிறவா சகோதரன் சூப்பர் ( விஜய் ஸ்தூபத்தின் மகன் சூர்யா ). இவர்கள் இருவரும் இணைந்து அந்த ஊரில் சின்ன சின்ன திருட்டு வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கதாநாயகி அஞ்சலி மலேசியாவில் ரப்பர் தோட்டத்தில் வேலை பார்க்கும் பெண்ணாக இருக்கிறார். இவர் தனது விடுமுறைக்கு தன் சொந்த ஊருக்கு திரும்புகிறார். அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதிக்கு படத்தில் சத்தமாக பேசினால் மட்டுமே காது கேட்க்கும். இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் அஞ்சலி இருவரும் சந்திக்கின்றனர். அஞ்சலி விஜய் சேதுபதியிடம் சத்தமாகவே பேசி வருவார். இது பிடித்துப்போய் நமக்கு என்ற பெண் இவள்தான் என எண்ணி அவரை காதலித்து வருவார் விஜய் சேதுபதி.

அப்படியே படத்தின் முதல் பாதி கதை நகர்கிறது. போகப்போக அஞ்சலியும் விஜய் சேதுபதியை காதலிக்கிறார். அந்த வேளையில் அஞ்சலி தனது விடுமுறை முடிந்து மீண்டும் மலேசியா செல்கிறார். அப்போது விமான நிலையத்திலேயே வைத்து அவரை தாலி கட்டி தன மனைவியாக்குகிறார் விஜய் சேதுபதி. அதன் பின் அஞ்சலியும் மலேசியா செல்கிறார். ஆனால் அங்கு ஒரு கும்பல் தாய்லாந்துக்கு கடத்துகின்றனர்.

இதனையறிந்த விஜய் சேதுபதி மற்றும் சூப்பர் இருவரும் இணைந்து கள்ள பாஸ்போர்ட் எடுத்து போதைப்பொருள் கும்பலுடன் இணைந்து திருட்டு தனமாக மலேசியா செல்கின்றனர். அதன் பின் அஞ்சலியை பார்த்தார்களா. அவரை எப்படி மீட்டு இருவரும் ஒன்று சேர்ந்தனர் என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் பிளஸ்:
சிந்துபாத் கதையை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு எடுக்க முயற்சித்ததே இயக்குனரின் பெரிய வெற்றி தான். படம் கலகலவென போரடிக்காமல் நகர்கிறது. விஜய் சேதுபதியின் மகன் நடிப்பு அருமை. ஜார்ஜ் மரியனும் தனது பங்கினை சிறப்பாக செய்துள்ளார்.

படத்தின் மைனஸ்:
படத்தின் முதல் பாதி கதையானது வழவழவென செல்கிறது. அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதி நாடுவிட்டு நாடு செல்வதெல்லாம் லாஜிக் மீறல். வில்லனிடம் விஜய் சேதுபதி அஞ்சலியை மீட்கும் காட்சிகளெல்லாம் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது.

விஜய் சேதுபதியின் இந்த சிந்துபாத்தை அவருக்காக ஒருமுறை பார்க்கலாம்.

படத்தின் சினிமாமேடை ரேட்டிங்: 2.75/5.