சாட்டை படத்தின் காப்பியா ராட்சசி ?? ராட்சசி படத்தின் திரைவிமர்சனம்!!!

0
419

திரைப்படம் : ராட்சசி
நடிகர்கள் : ஜோதிகா, ஹரீஷ் ப்ரீடி, பூர்ணிமா, சத்யன் மற்றும் பலர்.
இசை : சீன் ரோல்டன்
ஒளிப்பதிவு : கோகுல்
இயக்கம் : கெளதம் ராஜ்
தயாரிப்பு : S.R பிரபு

படத்தின் கதை நாம் அனைவரும் அறிந்ததே. கேட்பாடற்று கெடக்கும் அரசு பள்ளிக்கு ஆசிரியராக வரும் ஜோதிகா அந்த பள்ளி மற்றும் மாணவர்களை எப்படி மாற்றினார் என்பதே இந்த படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.

ஜோதிகா படித்து முடித்துவிட்டு கை நிறைய சம்பளம் கிடைக்கும் எத்தனையோ வெளி கிடைத்தாலும் ஆசிரியர் வேலையை தேர்வு செய்கிறார். இதன் மூலம் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலைக்கு சேர்கிறார்.

அந்த பள்ளியில் எதுவுமே சரியில்லை. ஆசிரியர்கள், பள்ளி மற்றும் மாணவர்கள் என எல்லாமே ஒழுக்கமற்று இருந்தது. இதற்கெல்லாம் காரணம் சட்டை படத்தில் நம் மனதை கவர்ந்த தம்பி ராமையாவின் கதாபாத்திரத்தில் இங்கு ஒருவர் இருக்கிறார்.

இதுபோக தனியார் பள்ளிகள் அதிகமாக பெருகி வருவதால் இங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய துவங்கியது. இதனை ஜோதிகா தனது ஆளுமை திறனால் எவ்வாறு திருத்தி பள்ளியை முன்னேற்றி கொண்டு வருகிறார். அதற்க்கு வர சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்பதே படத்தின் மீதி கதை.

இந்த படத்தில் ஜோதிகா வேறு எந்த படத்திலும் நடிக்காத அளவுக்கு புதிதாக நடித்துள்ளார். மாணவர்களுக்கு நல்வழிகளை கற்று கொடுக்கும் ஜோதிகாவின் காட்சிகள் நம்மில் பலரை கவரும். மாணவர்களாக நடித்த சிறுவர்கள் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் நடித்துள்ளனர்.

படத்தின் பிளஸ்:
ஒரு பெண்ணை மையப்படுத்தியே இந்த படத்தை எடுத்ததே இயக்குனருக்கு பெரிய வெற்றி.
படத்தில் ஜோதிகாவின் நடிப்பு படத்திற்கு பக்கபலம்.
அரசு பள்ளியை பற்றி பெற்றோர்களுக்கு புரிய வைக்கும் விதம்.

படத்தின் மைனஸ்:
என்னதான் இவர்கள் படத்தில் வித்தியாசத்தை கட்ட விரும்பினாலும் படத்தை பார்ப்பவர்களுக்கு சாட்டை படம் அவ்வபோது கண்முன்னே வந்து செல்லும்.
ஒரு சில காட்சிகளில் லாஜிக்கு அப்பாற்பட்டு இருப்பது.
படத்தில் அரைத்தமாவையேதான் அரைத்துள்ளனர்.

படத்தின் சினிமாமேடை ரேட்டிங்: 2.75/5