ஹாலிவுட்டில் ஜெயித்தாரா தனுஷ் !! பக்கிரி படத்தின் விமர்சனம்…

0
471

திரைப்படம் : கொலைகாரன்
நடிகர்கள் : தனுஷ், எரின் மோரியார்ட்டி, ஏபெல் ஜெபிரி மற்றும் பலர்.
இசை : அமித் திரிவேதி
இயக்கம் : கென் ஸ்கோட்
தயாரிப்பு : லுக் போஸ்சி , அதிதி ஆனந்த்

இந்த படத்தில் தனுஷ் தனது அம்மாவுடன் மும்பை நகரில் வசித்து வருகிறார். அவருடைய அப்பாவை பற்றிய தகவல் அவருக்கு தெரியாத வண்ணம் அவரது தயார் அவரை வளர்க்கிறார். சிறு வயது முதலே தனுஷுக்கு மேஜிக் செய்வதில் அலாதி பிரியம். இதனால் அதனை கற்றுக்கொள்கிறார். இப்படியே வாழ்க்கை போக ஒருநாள் அவரது தயார் இறந்து விடுகிறார். அப்போது தான் அவரது அப்பா எழுதிய கடிதம் ஒன்று தனுஷுக்கு கிடைக்கிறது. இதன் மூலம் அவரது தந்தை பாரிஸ்-ல் இருப்பதை கண்டுபிடிக்கிறார் தனுஷ்.

இந்நிலையில் தனது அப்பாவை சந்திப்பதற்காக தனது கையில் உள்ள சிறிதளவு பணத்துடன் தனது அம்மாவின் அஸ்தியையும் எடுத்துக்கொண்டு பாரிஸ் நாட்டிற்கு சென்றுவிட்டார் தனுஷ். பாரிசில் அவருக்கு கதாநாயகி எரின் மொரியார்டி அறிமுகமாகிறார். இவர்களின் பழக்கத்திற்கு பின்னர் கதாநாயகி தனுஷை காதலிக்கிறார். தனுசுக்கும் அவர் மீது ஈர்ப்பு இருந்துள்ளது.

அதன் பின் ஒருநாள் தனுஷ் தங்க இடம் இல்லாமல் ஒரு கடைக்குள் உள்ள பெட்டிக்குள் தஞ்சம் அடைகிறார். அந்த பெட்டியானது இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக வைத்திருந்த பெட்டி . எனவே அது இங்கிலாந்து நாட்டிற்க்கு அனுப்பப்படுகிறது. அந்த பெட்டியுடன் தனுசும் இங்கிலாந்து சென்று விடுகிறார்.

Pakkiri Movie Dhanush Photos HD

பின்னர் அந்த நாட்டிலிருந்து அவர் எப்படி தப்பித்தார். தனது அப்பாவை சந்தித்தாரா, அவரது காதல் என்னவானது என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் பிளஸ்:
படமானது ஹாலிவுட் படமாக எடுக்கப்பட்டாலும் பார்ப்பதற்கு நம்மக்கு தமிழ் படத்தை பார்க்கும் தாக்கத்தையே ஏற்படுத்தும்.
இதில் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது.
நாயகி உடனான காதல் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் மைனஸ் :
இந்த படத்தை பார்க்கும் போது தனுஷ் எளிதாக பாரிஸ் மற்றும் இங்கிலாந்து என சுற்றி திரிவது சற்று நடைமுறைக்கு சாதகமில்லாததாக உள்ளது. அதுமட்டுமின்றி படத்தில் ஒரு சிலரின் பின்னணி குரல்கள் படத்திற்கு சரியாக எடுபடவில்லை.

ஒட்டுமொத்தத்தில் பக்கிரி ஒரு உலகம் சுற்றும் வாலிபன்

படத்திற்கு சினிமாமேடை ரேட்டிங்: 2.75/5