சர்கார், LKG வரிசையில் NGK … படம் எப்படி இருக்கு திரைவிமர்சனம்..

0
678

இந்த படத்தில் படித்த இளைஞன் எவ்வாறு அரசியல் நிலையை மாற்றுவதற்கு அவர் செய்யும் தந்திர வேலைகள் தான்
இந்த படத்தில் விரிவாக கூறியுள்ளனர்.

இதில் நம் நாயகன் சூர்யா ( என்ஜிகே) எம்.டெக் படித்து முடித்து கார்ப்பரேட் வேலைகள் பிடிக்காமல் விவசாயம் செய்ய திரும்புகிறார். அதில் சமூகத்தில் அரசியல்வாதிகளுக்கு இருக்கும் சக்திகளை கண்டு வியக்கும் இவர் அரசியல்வாதிகளால் மட்டுமே தான் நினைத்தை சாதிக்க முடியும் என உணர்கிறார். எனவே அவரும் அரசியலில் களமிறங்கி பதவிக்காக பல வேலைகளை செய்து அதில் தனது சாணக்கிய தனத்தினையும் காட்டுகிறார் அவர். அதனால் பல பாதிப்புகளுக்கு உள்ளாகும் அவர் அதையும் தாண்டி சாதித்தாரா என்பதே படத்தின் எஞ்சிய கதை.

இந்த படத்தில் சூர்யாவிற்கு தந்தையாக தனது பணியை சிறப்பாக செய்துள்ளார் நிழல்கள் ரவி. இதில் சாய் பல்லவி சூர்யாவின் மனைவி வேடத்தில் வருகிறார். படத்தின் ஆரம்ப பாகத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள சூர்யா அதன் பின் போக போக மிரட்டி விட்டார் என்றே கூறலாம்.


படத்தில் சாய் பல்லவி ஆரம்பத்தில் நன்றாக நடித்துள்ளார். ஆனால் சூர்யா மீது சந்துகம் எழுந்த பின்னர் அளவுக்கு அதிகமாக நடித்துள்ளார். இது பார்ப்பவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்.
இதில் LKG படத்தில் ப்ரியா ஆனந்த் நடித்த அதே வேடத்தில் நடித்திருப்பர் ராகுல் ப்ரீத்தி சிங். இதனைக் கண்ட ரசிகர்கள் படத்தை LKG படத்தை பார்த்து காப்பி அடித்து விட்டதாக கூறுகின்றனர். ஆனால் இந்த படம் அதற்கு முன்னதாகவே எடுத்து விட்டு ரிலீஸூக்கு தாமதமானதே இதற்கு காரணம். தன் கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் அவர்.
படத்தில் அரசியல்வாதிகளாக வரும் தேவராஜ் மற்றும் பொன்வண்ணன் கதாபாத்தகரமாகவே மாறிவிட்டனர். அதுமட்டுமின்றி நம் நாட்டில் அந்த இரண்டு கட்சிகளை தாண்டி மூன்றாவதாக ஒரு கட்சி வந்தால் அவர்களை வளர விடாமல் அழித்து விடுவர் என்பதையும் சிறப்பாக காட்டியிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.
படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் பிண்ணனி இசை பக்கபலமாக இருந்தாலும் பாடல்களில் சற்று கோட்டைவிட்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும். அதிலும் படத்தில் “அன்பே அன்பே “ பாடல் எதற்கு வருகிறது என ரசிக்களை குழப்பியுள்ளது.
சண்டைக்காட்சிகளை சிறப்பாக கையாண்டுள்ளார் ஸ்டன்ட் இயக்குனர் சிவா. ஒளிப்பதிவில் சிவக்குமார் விஜயனும், படத்தொகுப்பில் ப்ரவீணும் தங்களது பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.


படத்தில் வசனங்களில் மிரட்டிவிட்டனர் என்றே கூறலாம். அதிலும் எதையாவது பத்தவைக்கனும்னா நடுவுல இருந்து பத்த வச்ச தான் மேலயும் கீழயும் பத்திக்கும் என்ற அரசியல்வாதிகளின் வசனமும், க்ளைமாக்ஸ் காட்சியில் நீங்களா மாறவே மாட்டிங்கடா என்ற சூர்யாவின் வசனமும் திரையரங்கில் கைதட்டல்களைப் பெறுகிறது.
படத்தில் சாய் பல்லவி கேரக்கடர் மைனஸ் என்றே கூறலாம். மற்ற படங்களில் சொன்னது போலவே இளைஞர்கள் அரசியலுக்கு வருவது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறையினருக்கு அரசியல் என்றால் என்ன என்பதை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை படத்தில் அழுத்தமாக சொல்லியுள்ளார் செல்வராகவன்.

படத்தின் சினிமாமேடை ரேட்டிங் : 2.75