கொலைகாரன் படத்தின் திரைவிமர்சனம்

0
460

திரைப்படம் : கொலைகாரன்
நடிகர்கள் : விஜய் ஆண்டனி , அர்ஜுன் , அஷிமா நாவால் , சீதா, நாசர் மற்றும் பலர்.
இசை : சைமன்
ஒளிப்பதிவு : முகேஷ்
இயக்கம் : ஆண்ட்ரூ லூயிஸ்
தயாரிப்பு : பிரதீப்

படத்தில் விஜய் ஆண்டனி தனியாக வசித்து வரும் சாதாரண மனிதர். இவர் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்படியே வாழ்க்கை தொடரும் பொது தான் நாயகி ஆஷிமா விஜய் ஆண்டனிக்கு பழக்கமாகிறார். ஆஷிமா ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண். வீட்டில் தன் அம்மா சீதா வுடன் வசித்து வருகிறார். இவர்களின் வாழ்க்கையில் சோகம் ஒன்று மறைந்த வண்ணமே உள்ளது. இதனிடையே விஜய் ஆண்டனி மற்றும் ஆஷிமா இருவருக்குமிடையே காதல் மலர்கிறது. நன்றாக செல்லும் இவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பம்.

மர்ம நபர் ஒருவன் நாயகியின் வீட்டில் கொலை செய்வதற்காக நுழைகிறான். அவனால் நாயகி மற்றும் அவரது தாயாருக்கு பெரிய பாதிப்பு உள்ளாகிறது. இதன் பின்னர் தான் படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நுழைகிறார். இந்த படத்தில் அவர் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பது நம் அனைவருக்கும் தெரியும். இதில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் அர்ஜுன் இந்த கொலை சம்பவத்தை பற்றி அலசுகிறார். விஜய் ஆண்டனி மற்றும் ஆஷிமாவை கொலை சம்பவம் குறித்து விசாரிக்கிறார் இவர்.

இந்த படத்தில் கொலை செய்யப்பட்டது யார். ஆஷிமா கொலைகாரனமிடமிருந்து தப்பித்தாரா, அர்ஜுன் தேடி வந்த கொலைகாரன் யார். அவனை எப்படி கண்டுபிடிக்கிறார். இதில் விஜய் ஆண்டனி மற்றும் ஆஷிமா ஒன்று சேர்ந்தார்களா என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் பிளஸ் :


படமானது விஜய் ஆண்டனியின் மற்ற படங்களை போல் இல்லாமல் படம் முழுவதும் சஸ்பென்ஸ் உடனே செல்கிறது. பாபநாசம் படத்தை போன்ற படம் மிகவும் திரில்லராக செல்கிறது. படத்தில் திரில்லர் கடைசி வரை நம்மை சீட்டின் நுனியில் உட்காரவைக்கிறது. படத்தில் சைமேனின் இசை மேலும் பலத்தினை சேர்க்கிறது. பாடல்கலைக்கட்டிலும் படத்தின் பின்னணி இசை படத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது.

படத்தின் மைனஸ்:

திரில்லராக செல்லும் படத்தின் நடுவே தேவையில்லாத ரொமான்ஸ் பாடல் நம்மை கடுப்படைய செய்யும். படத்தில் ஒரு சில இடங்களில் நடக்கும் சம்பவங்கள் நம்மக்கு புரியாமல் இருந்தாலும். கடைசில் நமக்கு மொத்தமாக புரிய வைத்துள்ளார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ்.

ஒட்டுமொத்தத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த படம் ஒரு வரப்பிரசாதம்.

படத்தின் சினிமாமேடை ரேட்டிங்: 3/5