கே.ஜி.எப்’ படத்தின் திரைவிமர்சனம்

0
493

கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகியுள்ள ப கேங்ஸ்டார் படம் தன இந்த ‘கே.ஜி.எப்’
(KGF – Kolar Gold Fields)

சிறு வயதில் தாய், தந்தையை இழந்த ஹீரோ தனது அம்மாவின் ஆசைப்படி, பெரிய பணக்காரராக ஆக வேண்டும் என்ற வெறியோடு வாழ்கிறார். அதற்காக இளம் வயதில் மும்பைக்கு சென்று அங்கிருக்கும் தாதாவிடம் வேலைக்கு சேர்ந்து , ராக்கி என்ற பெயரில் வளர்ந்து, பெரியவனான பிறகு மும்பையை கலக்கும் தாதாவாகிறார். பெரிய பெரிய டான்களே பார்த்து பயப்படும் அளவுக்கு அதிரடி ஆளாக உயரும் யாஷுக்கு மும்பை முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே லட்சியம்.


ஒரு பிரம்மாண்டமான கேங்ஸ்டர் படத்தை சரித்திர பின்னணியில் ஹாலிவுட் தரத்தில் படமாக்கியுள்ளார் இயக்குனர் பிரஷாந்த் நீல். கே.ஜே.ஆர்.அசோக் உடன் இணைந்து இவர் எழுதியுள்ள வசனங்கள் ஒவ்வொன்றும் மாஸ் பில்ட்-அப்.

ராக்கி நெருப்பு, எதிரிங்க பெட்ரோல், எதிரிங்க அதிமாக ஆக, அவன் அதிகமா பத்தி எரிவான்…”

“கேங்கைக் கூப்பிட்டுட்டு வர்றவன் கேங்ஸ்டர், ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர்” போன்ற வசனங்கள் தூள்.

சாதாரண கமர்ஷியல் கதையாக ஆரம்பித்து, அதை முடிக்கும் போது ஒரு சரித்திர நாயகனின் கதையாக ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் பிரஷாந்த் நீலுக்கு தேசிய விருது தரலாம்.
மேலும் பார்ட்2 வரும் என படக்குழு தெரிவித்து உள்ளது.பார்ட் 1ஒன்னே இப்படி என்றால் பார்ட் 2 எப்படியோ.