விமலின் களவாணித்தனம் இம்முறையும் ஒர்க்கவுட் ஆனதா!!! களவாணி 2 படத்தின் திரைவிமர்சனம்…

0
302

திரைப்படம் : களவாணி 2
நடிகர்கள் : விமல், ஓவியா, சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு மற்றும் பலர்.
இசை : நட்ராஜ் சங்கரன்
ஒளிப்பதிவு : வேல்ராஜ்
இயக்கம் : சற்குணம்
தயாரிப்பு : சற்குணம்

கிராமத்தில் ஊதாரித்தனமாக திரியும் இளைஞன் தன் காதலுக்காக அரசியலில் வெற்றி பெற எப்படியெல்லாம் களவாணித்தனம் செய்கிறார் என்பதே இந்த படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.

இந்த படத்தில் விமல் படத்தின் முதல் பாகத்தை போன்றே வேலை எதுவும் செய்யாமல் ஊதாரித்தனமாக சுற்றித் தெரிகிறார். இந்த படம் முதல் படத்தின் தொடர்ச்சி என நீங்கள் நினைத்தால் அது தவறு.

முதல் பாகத்தில் பள்ளி மனைவியாக நடித்த ஓவிய இதில் அப்படியே தனது வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒருமுறை விமல் ஆடு ஒன்றினை திருடும் போது ஓவியாவிடம் சிக்கிக்கொள்கிறார். அப்படியே இருவரும் பழக துவங்குகின்றனர்.

இது இறுதியில் காதலாக மாறுகிறது. இந்த நேரத்தில் தான் பஞ்சாயத்து தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அதில் விமலின் மாமாவான பப்ளிக் ஸ்டார் மற்றும் ஓவியாவின் அப்பாவும் எதிர்த்து போட்டியிடுகின்றனர். இதில் இவர்களிடமிருந்து பணத்தை கறக்க விமல் மற்றும் கஞ்சா கருப்பு இருவரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஆனால் இறுதியில் தனது காதலுக்காக விமல் இந்த தேர்தலில் வெற்றி பெறவேண்டிய கட்டாயமாகிறது.

அதன் பின் விமல் தேர்தலுக்காக என்னென்ன களவாணித்தனங்கள் செய்தார். இறுதியில் ஓவியாவிடம் சேர்ந்தாரா என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் பிளஸ்:
படத்தில் விமல் மற்றும் ஓவியாவின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.
கிராமத்து அரசியலின் களவாணித்தனங்கள் சிறப்பாக பொருந்தியுள்ளது.
படத்தில் காமெடி காட்சிகள் நன்றாக பொருந்தியுள்ளன.
நடிகர்களின் நடிப்பு அற்புதம்.

படத்தின் மைனஸ்:
பெரிதாக சொல்லும் அளவுக்கு படத்தில் குறை ஒன்னும் இல்லை. இருந்தாலும் ஒருசில காட்சிகளில் லாஜிக் மீறல்கள் தான் கொஞ்சம் ஓவராக இருக்கும்.

ஒட்டுமொத்தத்தில் குடும்பத்துடன் சிரித்து மகிழவேண்டிய நல்ல படம் களவாணி 2.

படத்தின் சினிமாமேடை ரேட்டிங்: 3/5