விக்ரம் நடிப்பில் வெளியான ” கடாரம் கொண்டான் ” படத்தின் திரைவிமர்சனம்…

0
349

திரைப்படம் : கடாரம் கொண்டான்
நடிகர்கள் : விக்ரம், அபிஹாசன், அக்ஷரா ஹாசன் மற்றும் பலர்.
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு : R குத்தா
இயக்கம் : ராஜேஷ் M செல்வா
தயாரிப்பு : கமல் ஹாசன்

பிரஞ்சு மொழியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “பாயிண்ட் பிளாங்க்” படத்தின் ரீமேக் தான் இது. அந்த படத்தை போல இதுவும் வெற்றி பெற்றதா என்பதை பார்ப்போம்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமே மூன்று பேர்கள் தான். அபி ஹாசன், அக்ஷரா ஹாசன் மற்றும் விக்ரம்.
இதில் அபி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இருவரும் திருமணமான தம்பபதியினர். இவர்கள் கோலாலம்பூரில் வசித்து வருகின்றனர். அக்ஷரா ஹாசன் கர்ப்பமாக இருக்கிறார். அவரின் கணவர் அபி ஹாசன் அங்கு மருத்துவ மனையில் மருத்துவராக பணிபுரிகிறார். இவர்களில் வாழ்க்கை அமைதியாக சென்று கொண்டுள்ளது. அப்போது தான் விக்ரம் அவர்களில் வாழ்க்கையில் நுழைகிறார்.

ஒரு நாள் விக்ரமை பலர் துரத்தி வர அதிலிருந்து போராடி தப்பித்த அவருக்கு காயங்கள் ஏற்பட அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார். அந்த மருத்துவமனையின் மருத்துவர் தான் அபி ஹாசன். அதன் பின்னர் விக்ரம் யார் என்ற விபரம் தெரிய வருகிறது. விக்ரம் முன்னாள் சீக்ரெட் ஏஜென்ட்டாக பணிபுரிந்தவர். அதன் பின் டபுள் ஏஜென்ட்டாக மாரி பல குற்றங்களுக்கு துணை புரிந்துள்ளார். இதனால் இவர் அந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டது தெரிந்து போலீஸார் அந்த மருத்துவமனையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

மறுபுறம் ஒரு கும்பல் அபி ஹாசனின் மனைவி அக்ஷ்ரா ஹாசனை கடத்தி விட்டனர். விக்ரமை அங்கு பொலிஸார் பிடியிலிருந்து தப்பிக்க வைத்தால் மட்டுமே அக்ஷரா ஹாசனை உயிருடன் விடுவோம் என மிரட்டு கின்றனர். இதனால் அவர் தனது முயற்சியால் விக்ரமை ங்கிருந்து தப்பிக்க வைக்கிறார்.

அதன் பின்னர் அக்ஷரா ஹாசன் காப்பாற்றபட்டாரா . விக்ரம் உண்மையிலேயே யார். அவருக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் பிளஸ்:
படத்தில் விக்ரம் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களின் மனதை மயக்கும் வண்ணம் உள்ளது.
ஜிப்ரானின் இசை படத்திற்கு அப்படியே ஒத்துபோய் உள்ளது.

படத்தின் மைனஸ்:
இந்த படத்தில் விக்ரமின் கெட்டப்பை பார்க்கும் போது படம் ஹாலிவுட் அளவிற்கு இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் ஏமாற்றம் தான்.
படத்தின் முதல் பாதி ரொம்ப இழுப்பது போன்ற பீல்.

ஒட்டுமொத்தத்தில் கடாரம் கொண்டான் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

படத்தின் சினிமாமேடை ரேட்டிங்: 2.5/5