தர்மபிரபுவில் விட்டதை கூர்காவில் பிடித்தாரா யோகிபாபு!!! கூர்க்கா படத்தின் திரைவிமர்சனம்…

0
513

திரைப்படம் : களவாணி 2
நடிகர்கள் : யோகிபாபு, சார்லி, எலைசா மற்றும் பலர்.
இசை : ராஜ் ஆர்யன்
ஒளிப்பதிவு : கிருஷ்ணன் வசந்த்
இயக்கம் : சாம் அன்டன்
தயாரிப்பு : சாம் அன்டன்

நாம் அன்றாடம் சந்திக்கும் கூர்க்கா வேலை செய்பவர்களும் ராணுவ வீரர்களுக்கு இணையானவர்கள் என்பதனை படத்தில் அனைவரும் ரசிக்கும் படி கூறியுள்ளனர்.

படத்தின் யோகிபாபு கூர்க்கா பரம்பரையை சேர்ந்தவர். அவர்கள் குடும்பம் பரம்பரைபரம்பரையாக இந்த தொழிலையே செய்து வருகின்றனர். ஆனால் யோகிபாபுக்கு போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை. அதற்காக பல முயற்சிகள் எடுக்கிறார் ஆனால் அவரால் இறுதிவரை போலோஸ் ஆக முடியவில்லை. பின்னர் வேறு வழியில்லாமல் செக்யூரிட்டி தொழிலுக்கு வருகிறார். இவர் தனது வழக்கமான ஸ்டைலில் கலக்கி வருகிறார்.

இருந்தாலும் இவருக்கு இந்த தொழிலில் ஆர்வம் இல்லை. அப்போது தான் வெளிநாட்டு தூதரக பெண்ணை சந்திக்கிறார். அவரை பார்த்ததும் யோகிபாபுவுக்கு மிகவும் பிடித்துவிட அவரை காதலித்து வருகிறார். பின் ஒருகட்டத்தில் அவரும் காதலுக்கு ஓகே சொல்லிவிட இருவரும் டூயட் பாடி திரிக்கின்றனர்.

அப்போது தீடீரென ஒருநாள் ஒரு தீவிரவாத கும்பல் ஷாப்பிங் மால் ஒன்றினை கைப்பற்றி விடுகின்றனர். அதற்குள் கதாநாயகியும் சிக்கி கொள்கிறார். அது யோகிபாபுவுக்கு தெரியவர அதிலிருந்து கதாநாயகியை மீட்க அவர் செய்யும் சாகசங்கள் மற்றும் தில்லு முள்ளு இறுதியில் கதாநாயகியை காப்பாற்றினாரா? அவர்கள் என் கதாநாயகியை பிடிக்க வந்தனர் என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் பிளஸ்:
படத்தில் யோகி பாபு தனது இயல்பான காமெடியின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் சிரிக்க வைக்கிரார்.

படத்தை முடிக்கும் போது சிறப்பான கருத்தினை கூறியுள்ளனர்.

கதாநாயகி மற்றும் சார்லியின் நடிப்பு படத்திற்கு பக்கபலம்.

படத்தின் மைனஸ்:
படத்தின் முதல் பாதி மிகவும் மெதுவாக செல்லும்.
இரண்டாவது பாதியில் ஒருசில காட்சிகள் படத்திற்கு சம்பந்தமில்லாமல் இருக்கும்.

ஒட்டு மொத்தத்தில் நாட்டின் எல்லையில் ராணுவ வீரர்கள் , நாட்டின் உள்ளே கூர்க்காகள் என்பதனை சிறப்பாக மக்களுக்கு புரியும்படி சிரிக்கும்வண்ணம் கூறியுள்ளார் இயக்குனர் சாம் அன்டன்.

படத்தின் சினிமாமேடை ரேட்டிங்: 2.75/5