எமனாக கலக்கினரா யோகிபாபு!!! தர்மபிரபு படத்தின் திரைவிமர்சனம்…

0
617

திரைப்படம் : தர்மபிரபு
நடிகர்கள் : யோகிபாபு, ராதா ரவி, ரேகா, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர்.
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு : மகேஷ் முத்துசாமி
இயக்கம் : முத்துக்குமரன்
தயாரிப்பு : வெங்கடேஷ்

படத்தில் ராதா ரவி எமலோகத்தில் ராஜாவாக எமன் பதவியில் இருந்துவருகிறார். இவருக்கு மனைவியாக ரேகா வருகிற. இதில் சித்திர குப்தராக ஆர்ஜே ராமேசும் வருகின்றனர். நீண்ட நாட்களாக பதவியில் இருந்துவந்த ராதாரவிக்கு வயதுஆகிவிடவே அவர் அவரது மகன் யோகிபாபுவை தனது அரியாசனத்தில் அமரவைக்க முடிவு செய்கிறார். ஆனால் யோகிபாபுவுக்கு அந்த பதவிமீது எந்தவித ஆசையும் இல்லை. ஆரம்பத்தில் வேண்டாம் என சொல்லும் யோகிபாபு இறுதியில் அவர்களது கட்டாயத்தால் ஒப்புக்கொள்கிறார்.

அங்கு யோகிபாபு அரியணையில் அமர்ந்தது அங்குள்ளவர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே அவரை திட்டம் தீட்டி அதில் சிக்க வைக்க முயற்சி செய்கின்றனர்.

தனக்கு பொறுப்பு வந்தபின் அதனை கண்ணாபின்னாவென உபயோகிக்கிறார் யோகிபாபு. இதுமட்டுமல்லாமல் ஒருமுறை பூலோகம் வரும் போது ஒரு உயிரை காப்பாற்றிவிடுகிறார். இதனால் சிவன் கடும் கோபத்துக்கு உள்ளாகிறார். இங்கு சிவன் வேறுயாரும் இல்லை நம்ம மொட்டை ராஜேந்திரன் தான். எனவே அவரின் கட்சிகளும் நம் சிரிப்புக்கு பஞ்சமிருக்காது.

சிவன் எமனின் பதவிக்கு கேடு விதிக்கிறார். இதிலிருந்து யோகிபாபு மீண்டாரா. பதவியை பாதுகாக்க அவர் செய்யும் தில்லுமுல்லு அதுமட்டுமல்லாமல் தற்போதைய சமூக பிரச்சனைகளுக்கு அவர் சொல்லும் தீர்வு என்னதான் என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் பிளஸ்:
படத்தில் யோகிபாபு தனது பங்கினை மிகச்சிறப்பாக செய்துள்ளார். இவரின் டைமிங் காமெடி நம்மையறியாமல் நமக்கு சிரிப்பினை வரவழைக்கு. தற்போது நாட்டில் நடக்கும் ஆணவ படுகொலை, ஜாதி அரசியல், வாரிசு அரசியல் என பலவற்றை படத்தில் கொண்டுவந்தது அற்புதம். படத்தின் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்லும்.

படத்தின் மைனஸ்:
சிறிய கதையை ரொம்ப நீளமாக இழுத்துள்ளனர். பார்க்கும் பொது ஒருசில இடங்களில் அது நமக்கே தெரிய வரும்.

ஒட்டுமொத்தத்தில் குடும்பத்துடன் காணக்கூடிய சிறந்தபடம் தர்மப்பிரபு.

படத்தின் சினிமாமேடை ரேட்டிங்: 2.75/5