தேவி 2 படம் எப்படி இருக்கு ?? படத்தின் திரைவிமர்சனம்..

0
762

கதைக்களம்:
இந்த படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இயக்குனர் விஜய் உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபுதேவா மற்றும் தமன்னா ஜோடிக்கு குழந்தை ஒன்று பிறந்து விட்டது. பின்னர் வேலைக்காக பிரபுதேவா மொரிஷியஸ் நாட்டிற்கு தன் மனைவியுடன் குடிபெயர்கிறார்.

பிரபுதேவாவுக்கு முதல் பாகத்தில் வந்த ரூபி பேய் இன்னும் இருப்பதாக சந்தேகம் கொள்கிறார். ஆனால் அதற்கு மாறாக இங்கு நடக்கிறது. பிரபுதேவாவின் நடவடிக்கையில் சற்று மாற்றங்கள் தெரிகிறது. அதை தமன்னா கவனிக்கிறார். பின்னர் பிரபுதேவா வேறொரு பெண்ணுடன் இருப்பதைக் கண்டு தமன்னா அதிர்ந்து போகிறார். என்ன நடக்கிறது எனத் தெரியாமல் இந்த குழப்பத்திலிருந்து விடுபட கோவை சரளாவிடம் உதவி கோருகிறார்.

இதன்நடுவே பிரபுதேவாவின் வாழ்வில் இரண்டு நபர்கள் புதிதாக நுழைகின்றனர். அவர்களோடு பழகுவதால் அவரின் உயிருக்கு ஆபத்து என தெரியவருகிறது. இந்நிலையில் பல அமானுஷ்ய நிகழ்வுகள் அங்கு நிகழ்கின்றன.
பிரபு தேவாவுக்கு எதனால் எல்லாம் நடக்கிறது என விளங்கவில்லை. ஒருபுறம் தமன்னா தன் கணவரை அதிலிருந்து மீட்டுவிட போராடுகிறார். அவர் வாழ்வில் வந்த இரண்டு பெண்கள் யார் . அவர்களுக்கும் பிரபுதேவாவுக்கும் என்ன தொடர்பு , ஆபத்திலிருந்து மீண்டாரா அவர் என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் விமர்சனம்


தேவி படத்தின் முதல் பாகத்தை ரசிகர்களுக்கு நினைவுகூர்ந்து விட்டு ரசிகர்களை இர்ணடாம் பாகத்திற்குள் அழைத்துச் செல்கிறார் இயக்குனர் விஜய்.
முதல் பாகத்தில் க்ளாமர், காமெடி என நம்மை கவரந்த அவர். இந்த படத்தில் சற்று மாறுதலாகவே இயக்கியுள்ளார். படம் பார்ப்பவர்களுக்கு அது புரியும்.
படம் முழுவதும் பிரபுதேவா தன் பணியினை சிறப்பாக செய்துள்ளார். அதிலும் டான்ஸ்ல் சொல்லவே வேண்டாம்.
தமன்னா க்ளாமர் காட்டுவர் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இங்கு சற்று ஏமாற்றம் தான். ஆம் படம் முழுவதும் குடும்ப பெண்ணாகவே தமன்னா நடித்துள்ளார். பேய்களிடம் மாட்டிக்கொண்டு இவரின் செயல்கள் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் உள்ளது.
பேய் படம் என்றாலே கோவை சரளா இருப்பார். அந்தவகையில் இவரை இந்த படத்தில் இணைத்துள்ளனர். இவர் தமன்னாவுக்கு ஆதரவாக பேய்களை விரட்டும் பணியில் காமெடியுடன் செயல்படுகிறார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்ஜே பாலாஜி முதல் பாகத்தில் வந்த அதே கதாபாத்திரத்தில் பிரபுதேவாவின் நண்பராக இந்த படத்தில் வருகிறார். ஆனால் சில சீன்களில் மட்டுமே வருகிறார். தான் வந்த காட்சிகளின் ரசிகர்கள் சிரிப்புக்கு பஞ்சம் வைக்கவில்லை அவர்.
படத்தில் நந்திதாவின் கதாபாத்திரம் சஸ்பென்ஸ்.

ஒளிப்பதிவாளர் போஸ் படத்தினை இயல்பாக படம்பிடித்துள்ளார். எடிட்டர் ஆண்டனி படத்தினை தெளிவாக ரசிகர்களை கொண்டு செல்லும் படி படத்தொகுப்பினை செய்துள்ளார்.

படத்தின் ப்ளஸ்:
படத்தில் காமெடி பாகங்களை சிறப்பாக கையாண்டுள்ளனர்.
பிரபு தேவா மற்றும் தமன்னா மற்றும் நந்திதாவின் நடிப்பு படத்திற்கு பக்கபலம்.


படத்தின் மைனஸ்:
படத்திற்கும் தேவி 2 என்ற பெயருக்கும் சம்பந்தமே இருக்காது.
ஒரு சில காட்சிகளில் இயக்குனர் சௌதப்பியுள்ளார்.

கோடை விடுமுறையில் குடும்பத்துடன் காண்பதற்கான நல்ல எண்டர்டெயின்ட்மண்டான படம்.

படத்திற்கு சினிமாமேடை ரேட்டிங் : 2.75/5