அதர்வா – மேகா ஆகாஷ் நடித்துள்ளா பூமராங் படத்தின் திரை விமர்சனம்!!

0
602

கண்டேன் காதலை ஜெயங்கொண்டான், சேட்டை போன்ற படங்களின் இயக்குனர் கண்ணன். தற்போது அதர்வா, மேகா ஆகாஷ், ஆர்ஜே பாலாஜி ஆகியோரை வைத்து பூமராங் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது காண்போம்

கதைக்களம்

இந்த படத்தின் ஹீரோ சக்தி என்ற அதர்வா ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஒரு கட்டத்தில் இவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு இவரை கொலை செய்ய ஆட்கள் வருகின்றனர். இதன் காரணமாக அந்த நிறுவனத்தில் பிரச்சனை ஏற்பட, இவர் அந்த வேலையை விட்டு நீக்கப்படுகிறார். பின்னர் வேறு வழியின்றி தனது சொந்த ஊருக்கு வருகிறார் சக்தி. தனது சொந்த ஊரில் அரசியல்வாதிகளின் மெத்தனத்தால் தண்ணீர் பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. இதன் காரணமாக தன் நண்பர் ஆர்ஜே பாலாஜி மற்றும் இந்துஜா ஆகியோருடன் சேர்ந்து தனது கிராம மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற கடுமையாக போராடுகிறார் அதர்வா. மேலும் அரசியல்வாதிகளை எதிர்த்து அவர்களுடன் பிரச்சினையை வளர்த்துக் கொள்கிறார். இறுதியில் தனது கிராமத்தின் பிரச்சினையை எப்படி சமாளித்தார் சக்தி என்பதுதான் கதை.

படத்தின் பிளஸ்

படத்தின் மிகப்பெரிய பிளஸ் நதிகளை இணைப்போம் என்ற படத்தின் மையக்கரு தான். படத்தின் திரைக்கதையை சுவாரசியமாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் கண்ணன். பின்னணி இசை மற்றும் சண்டைக் காட்சிகள் அற்புதம். பாலாஜி அதர்வா மற்றும் இந்துஜா ஆகியோர் சேர்ந்து செய்யும் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது.

படத்தின் மைனஸ்

படத்தில் நடிகை மேகா ஆகாஷ் எதற்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. அதர்வாவை காதலிப்பது மட்டுமே அவரது வேலை. எப்போதும் போல் அரசியல்வாதிகளின் மெத்தனத்தை அதே பாணியில் சுட்டிக்காட்டியுள்ளது படம். ஏற்கனவே நாம் பலமுறை பார்த்து சலித்துள்ள ஒரு கதை என்பதால் பார்க்க பார்க்க சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.

எங்கள் சினிமாமேடை மதிப்பீடு: 3/5