பெண்ணியம் பேசுகிறதா அல்லது வெறும் ஆபாசம் தானா!!! ஆடை படத்தின் திரைவிமர்சனம்…

0
327

திரைப்படம் : ஆடை
நடிகர்கள் : அமலாபால், ரம்யா மற்றும் பலர்.
இசை : பிரதீப் குமார்
ஒளிப்பதிவு : விஜய் கார்த்திக் கண்ணன்
இயக்கம் : ரத்ன குமார்
தயாரிப்பு : விஜி சுப்பிரமணியன்

ஆடையிலல்லாமல் டீஸர் வெளியிட்டு அனைவரின் கவனத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய ஆடை திரைப்படம் எப்படி இருக்கு என்பதனை வாங்க பார்க்கலாம்.

இந்த படத்தில் கதாநாயகி அமலாபால் (காமினி) பிரபல தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார். அவரின் தோழியாக வருபவர் ரம்யா அதனுடன் பல் ஆன் நண்பர்களும் அவரது குழுவில் உண்டு. அமலாபாலுக்கு தாயாக வருபவர் ஸ்ரீரஞ்சினி. இவர் தன் மகளை எப்போதும் கண்டித்து கொண்டே இருக்கும் தாயக வருகிறார். இதில் அமலாபால் எதையும் சாதித்து விடும் ஒரு பெண். அதாவது யாராவது உன்னால் அதை செய்துவிட முடியுமா என வாய் விட்டால் போதும் அதை செய்து விட்டு தான் அடுத்த வார்த்தையே பேசுவார். அந்த அளவுக்கு பெட்கட்டுவதில் ஆர்வம் கொண்டவர்.

இவர் தன தொலைக்காட்சிக்காக தனது குழுவினருடன் பிராங்க் நிகழ்ச்சி நடத்திவருகிறார். இப்படியே வாழ்க்கை போக ஒருநாள் அமலாபால் பிறந்தநாள் வருகிறது. அப்போது அவருடன் உள்ள நண்பர்கள் அனைவரும் இணைந்து அவர்கள் பழைய ஆபீஸ் இருந்த கட்டிடத்தில் இணைந்து குடித்து பார்ட்டி கொண்டாடுகின்றனர். அப்போது அமலாபால் ஒரு நாள் முழுவதும் இங்கு ஆடையில்லாமல் என்னால் இருக்க முடியும் என பெட் காட்டுகிறார்.

அப்படியே காலையில் கண்விழித்து பார்க்கும் போது அமலாபால் உண்மையிலேயே ஓட்டுத்துணி இல்லாமல் நிர்வாணமாக இருக்கிறார். தனது உடலை மறைப்பதற்கு அங்கு சின்ன துணி கூட இல்லை. அவர் எப்படி அந்த நிலைமைக்கு வந்தார். அவர் இப்படி ஆகியது யார். இறுதியில் அவர் என்ன ஆனார் என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் பிளஸ்:
படத்தில் அமலாபாலின் நடிப்பு சரியாக பொருந்தியுள்ளது.
பெண்ணியத்தி குறித்து சுய கட்டுப்பாடு இல்லாமல் தாமாக திரிவது ஒன்றும் பெண்ணியம் இல்லை என்று கருத்து சூப்பர்.
படத்தை பார்க்கும் நமக்கு ஆபாசமில்லாமல் படமாக்கிய விதம் சிறப்பு.

படத்தின் மைனஸ்:
தற்போது வரும் படங்கள் அனைத்திலும் அரசியல் பேசுவது வழக்கமாகி விட்டது. அந்தவகையிலிந்த படத்தில் நீட் தேர்வு, மீ டூ, ஆதார் கார்ட் என பல விஷயங்களை உள்ளே கொண்டு வந்துள்ளனர். ஆனால் அதற்கும் இந்த படத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி பார்ப்பவர்கள் அனைவர்க்கும் வருகிறது.

ஓட்டு மொத்தத்தில் நாம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே ஆபாசத்தை படத்தில் காட்டி கருத்துடன் படத்தை முடித்துள்ளனர்.

படத்தின் சினிமாமேடை ரேட்டிங்: 2.75/5