வடசென்னை திரை விமர்சனம்.!!!

0
149
vada chennai movie review
vada chennai movie review

ஒரு சில கூட்டணியை பார்த்தாலே கண்ணை மூடிக் கொண்டு அவர்களின் படத்திற்கு முதல் நாளே போகலாம். அப்படிபட்ட இயக்குனர்-நடிகர் கூட்டணி என்றால் அது வெற்றிமாறன்-தனுஷ் தான். இவர்களின் பல வருட உழைப்பில் தயாராகி இன்று வெளியாகி இருக்கிறது வட சென்னை. சென்னையை விரும்பும் ரசிகர்களுக்கு வடசென்னை பிடித்ததா பார்ப்போம்.

செந்தில்(கிஷோர்) குணா(சமுத்திரக்கனி) இருவரும் ஆரம்பத்திலேயே ஒரு கொலையை செய்கின்றனர். அந்த கொலையில் இருந்தே பல அரசியல் பிறக்கின்றது. அதன் பின் செந்தில், குணா இருவரும் பிரிந்து தங்களுக்கென்று ஒரு கேங்கை உருவாக்கி ஒருவரை ஒருவர் கொலை செய்ய துடிக்கின்றனர்.

அந்த நேரத்தில் தனுஷ் (அன்பு) கேரம் ப்ளேயராக வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்க இந்த கேங் வாருக்குள் யதார்த்தமாக உள்ளே வர அதை தொடர்ந்து யார் கொடி வடசென்னையில் பறக்கின்றது, ஆரம்பத்தில் செந்தில் குணா யாரை கொலை செய்தார்கள், தனுஷ் தன்னை சூழ்ந்த பிரச்சனைகளை எப்படி தீர்க்கின்றார் என்பதை படமாக இல்லை பதிவாக செய்துள்ளது இந்த வடசென்னை.

க்ளாப்ஸ்
நடிகர் நடிகைகள் பங்களிப்பு, ஒரு சீன் என்றாலும் பலரும் ஸ்கோர் செய்கின்றனர். படத்தின் கதை களத்திற்காக வெற்றிமாறன் எடுத்த மெனெக்கெடல், உண்மையாகவே வியப்பை தருகின்றது.இசை ஒளிப்பதிவு செட் போன்ற டெக்னிக்கல் விஷயங்கள். மக்களின் வாழ்க்கை முறையை யதார்த்தமாக காட்டிய விதம்.

பல்ப்ஸ்
பெரிதாக ஏதும் இல்லை, நிறைய கதாபாத்திரம் வருவதால் யார் யார் என்று நினைவில் வைக்க கொஞ்சம் தடுமாற்றம் அடைய வைக்கிறது.மொத்தத்தில் வடசென்னை படம் என்பதை விட தமிழ் சினிமாவின் முக்கிய பதிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here