‘அடங்க மறு’ திரைவிமர்சனம் விமர்சனம்

0
190
adanga maru movie review
adanga maru movie review

நேர்மையான போலீஸ் அதிகாரி , பணத்திமிரால் கற்பழிப்பு, கொலை செய்யும்மேல்தட்டு வர்க்கத்தினர் ஒரு சிலருக்கு உடந்தையாக இருக்கும் ., போலீஸ் அதிகாரிகளையும் , அந்த மேல்தட்டு வர்க்கத்தையும் தீவிரமாக எதிர்ப்பதால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தான் அடங்க மறு” படத்தின் கரு.

சென்னையின் முக்கியமான ஏரியாவில் மைம் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்ரடராக பணிக்கு சேர்கிறார் ஜெயம் ரவி. அதே காவல்நிலையத்தில் மற்றொரு சப்-இன்ஸ்பெக்ரடராக இருக்கிறார் அழகம் பெருமாள்.

ஜெயம் ரவி தனது அப்பா பொண்வண்ணன், அம்மா ஸ்ரீரஞ்சினி, அண்ணன் சுப்பு பஞ்சு, அண்ணி மீரா , அவர்களது இரட்டை குழந்தைகள் …என கூட்டுக் குடும்பத்தில்மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வருகிறார்.

இவர்களது குடும்பத்திற்கு நெருக்கமான குடும்பத்துபெண்ணான ராஷி கண்ணாவும், இவரும் உயிருக்கு உயிராய் காதலிக்கிறார்கள். நேர்மையான போலீஸான ஜெயம் ரவி தனது வேலையை சரியாக செய்ய வேண்டும், யாருக்கும் பயப்படக் கூடாது என்ற எண்ணம் கொண்டு பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில், ஜெயம் ரவி விசாரிக்கும் ஒரு கற்பழிப்பு கொலை வழக்கில்., சமுதாயத்தில் அந்தஸ்த்தில் இருப்பவர்களுக்கு சம்பந்தம் இருப்பதை ஜெயம் ரவி கண்டுபிடிக்க, அந்த வழக்கைஅடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாத அளவிற்கு உயர் அதிகாரிகள் ஜெயம் ரவிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

இயக்கம் : கார்த்திக் தங்கவேல் , தனது இயக்கத்தில் ., நேர்மையான போலீஸ் அதிகாரிகளைஎப்படி ? யார் …? அடக்க நினைத்தாலும், ஒருநாள் இல்லை ஒரு நாள் எப்படியாவது அவர்கள் குற்றவாளிகளை கூ ண்டில் ஏற்றுவார்கள் என்பதையும் , நேர்மையானவர்கள் யாருக்கும் அடங்க மறுப்பதையும், சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களையும் கோர்த்து வாங்கி ஒரு அழகிய ஆக்ஷன் படமாக உருவாக்கி இருக்கிறார். படத்தின் காட்சிப்படுத்தல்களும் ,வசனங்களும் புதுசாக சிறப்பாக இருப்பது இப்படத்திற்கு பெரும் பலம்.

மற்றபடி ,பின் பாதி திரைக்கதையையும் , ஆங்காங்கே தென்படும் லாஜிக் மீறல்களையும் இயக்குனர் இன்னும் சற்று கவனித்திருந்தால் ” அடங்க மறு – இன்னும் பெரிய அளவில் திரையரங்குகளில் திமிறி எழுந்திருக்கும்!

அடங்க மறு’ ஜெயம் ரவிக்கு அடுத்த ஆக்ஷன் வெற்றி’!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here