Connect with us

லோகேஷ் கனகராஜின் படம் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வர உள்ளது

Cinema News

லோகேஷ் கனகராஜின் படம் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வர உள்ளது

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும், பான் இந்திய படம் மைக்கேல்.

இந்திய திரைப்படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார்.

மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன்சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனங்கள் இணைந்து மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றன.

இப்படத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன் ஆகியோருடன் திவ்யான்ஷா கௌஷிக், வரலக்‌ஷ்மி,வருண் சந்தீஷ்,அனுசிய பரத்வாஜ் ஆகியோர் இணைந்துள்ளனர்.

Image

சாம் CS இசையமைக்கும் இந்த படத்துக்கு கிரன் கௌஷிக் ஒளிப்பதிவு செய்ய, திருப்பூரனேனி கல்யாண் சக்ரவர்த்தி, ராஜன் ராதமணாளன் மற்றும் ரஞ்சித் ஜெயக்கொடி இணைந்து வசனம் எழுதுகின்றனர்.

ஏற்கனவே வெளியாகியிருந்த இப்படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் அண்மையில் சித் ஸ்ரீராம் குரலில் தெலுங்கில் வெளியான முதல் பாடல் ரசிகர்களிடையே வைரலாகின.

இந்நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி உலகெங்கும் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரும் மிரட்டலான லுக்குடன் வெளியிடப்பட்டுள்ளது.இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் அதனை போல லோகேஷ் கனகராஜும் இதில் ஒரு தயாரிப்பாளர் ஆவார்.

sundeep kishan vijay sethupathi GVM Starring MICHAEL Release date

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top