Connect with us

“இது மாம்பழம் சீசன்! கோலியை சீண்டிய நவீன் உல் ஹக்கை வச்சு செய்த சம்பவங்கள்!”

Ipl 2023

“இது மாம்பழம் சீசன்! கோலியை சீண்டிய நவீன் உல் ஹக்கை வச்சு செய்த சம்பவங்கள்!”

லீக் சுற்றில் லக்னோ – பெங்களூரு அணிகள் மோதிய போது விராட் கோலி, லக்னோ அணியின் நவீன் உல் ஹக், கவுதம் கம்பீர் ஆகியோர் மோதலில் ஈடுபட்டனர். மேலும் போட்டி முடிந்த பின்னர் வீரர்கள் கைகுலுக்க வந்த போது கோலி அவரை பார்த்து பேசி திரும்பும் போது நவீன் உல் ஹக் கையை வீசியது பெரும் சர்ச்சையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. நவீன் உல் ஹக்கை லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் அழைத்த போது, அவரை மதிக்காமல் நவீன் உல் ஹக் கடந்து சென்றதால் ரசிகர்களின் கோபம் அதிகரித்தது.

மேலும் கோலியும் நவீன் உல் ஹக்கும் தங்களது இண்டாகிராம் ஸ்டோரியை வைத்து இந்த சண்டையை மேலும் பற்ற வைத்தனர். இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய வீரர்களை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் பாராட்டினார். இன்னொரு பக்கம் விராட் கோலி அவுட்டானதை நவீன் உல் ஹக் ஸ்வீட் மாம்பழங்களுடன் கொண்டாடினார். அவரின் இந்த செயல் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கோபம் அடைந்தனர். நவீன் எந்த மைதானத்தில் ஓவர் வீச வந்தாலும் விராட் கோலியின் பெயரை சொல்லி கத்தி அவரை வெறுப்பபேற்றினர்.

இந்த பிரச்னை நீண்டு கொண்டே போன நிலையில் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறினது. இதனால் லக்னோ மற்றும் மும்பை அணிகள் எலிமிணெட்டர் சுற்றில் நேற்று சென்னையில் மோதின. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 188 எடுத்தது. இதில் சிறப்பாக பந்துவீசிய நவின் உல் ஹக் 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விக்கெட் வீழ்த்தியபின், கேஎல் ராகுல் போல் காதுகளை மூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

ஏற்கனவே கேகேஆர் அணி ரசிகர்களுக்கு நவீன் உல் ஹக் “சைலன்ஸ்” என்று செய்கை செய்தது சிக்கலில் சிக்கினார். தற்போது கேஎல் ராகுல் போல் கொண்டாடியதால் மும்பை அணி ரசிகர்களும் நவீன் உல் ஹக்கை கடுமையாக விமர்சிக்க தொடங்கி சென்னை மைதானத்தில் கோலி கோலி என கோஷ்மிட தொடங்கினர். இருப்பினும் லக்னோ அணி தோல்வி அடைந்து ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

மும்பை வெற்றியை கொண்டாடும் விதமாக சந்தீப் வாரியர் மற்றும் விஷ்ணு வினோத் ஆகியோர் மாம்பழங்கள் வைத்து கொண்டாடியுள்ளனர். அதேபோல் நவீன் உல் ஹக் கொண்டாடியது போல் காதுகளை மூடி கொண்டாடியதோடு, வாய் மற்றும் கண்களையும் மூடி கொண்டாடியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகளும் மாம்பழம் சின்னத்தில் ஸ்மைலி பதிவிட்டு லக்னோ அணியை கிண்டல் செய்துள்ளது.

See also  "சென்னை திருப்பதி சன்னிதானத்தில் CSK வெற்றிக் கோப்பைக்கு பூஜை! உற்சாக முழக்கமிட்ட CSK ரசிகர்கள்!"

இதனிடையே லக்னோ அணி தனது ட்விட்டர் பக்கத்தில், Mango, Mangoes, Sweet போன்ற வார்த்தைகளை ம்யூட் செய்து வைத்துள்ளதாக புகைப்படம் பதிவிட்டு தங்களை தாங்களே கலாய்த்து கொண்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிமாக ஷேர் செய்தும் விராட் கோலிக்கு ஆதரவாக இந்தியாவின் கிங் கோலியிடம் மோதினால் இது தான் கதி என பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Ipl 2023

To Top