Connect with us

போடு தகிட தகிட..பரபரப்பான ஆட்டத்தில் அசத்தலான ஹாட்ரிக் கோல் அடித்த மெஸ்ஸி..! வைரல் வீடியோ..

Featured

போடு தகிட தகிட..பரபரப்பான ஆட்டத்தில் அசத்தலான ஹாட்ரிக் கோல் அடித்த மெஸ்ஸி..! வைரல் வீடியோ..

உலகில் இருக்கும் பெரும்பாலான மக்களால் அதிகம் விரும்பப்படும் விளையாட்டு எது என்றால் அது நிச்சயம் கால்பந்து விளையாட்டு தான். இந்தியாவில் எப்படி கிரிக்கெட் விளையாட்டுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போல் உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து – 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்துள்ளது.

அன்று இரவிலிருந்து அர்ஜென்டினாவின் வெற்றியை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அர்ஜென்டினா மற்றும் குராக்கோ அணிகளுக்கு இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி நடைபெற்றது . இதில் தனது அபார திறமையால் லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

பரபரப்பான ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் கோல் அடித்தபோது மெஸ்ஸி ,அர்ஜென்டினா அணிக்காக 100 கோல்கள் அடித்து புதிய மைல்கல்லை எட்டினார்.இதனை தொடர்ந்து 33 , 37 வது நிமிடங்களில் தனது தனக்கே உரிய பாணியில் கோல் அடித்து ரசிகர்களை உற்சாகப்டுத்தினார்.இதனால் ஆட்ட நேர முடிவில் 7-0 என அர்ஜென்டினா அணி அபார வெற்றி பெற்றது.

உலகில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட விளையாட்டு வீரர்களில் ஒருவராக திகழும் லியோனல் மெஸ்ஸிக்கு ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  2021-இல் செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது… ரோஹித் சர்மாவுக்கு அலெர்ட்

More in Featured

To Top