Connect with us

‘Thalapathy 69’ படத்தை இயக்க போவது ‘LEO’ பட நடிகரா? பரபரப்பு தகவல்!

Cinema News

‘Thalapathy 69’ படத்தை இயக்க போவது ‘LEO’ பட நடிகரா? பரபரப்பு தகவல்!

தளபதி விஜய் நடித்து வரும் 67வது திரைப்படமான ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் ’தளபதி 68’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் ’தளபதி 69’ படத்தை இயக்குவதற்கு ’லியோ’ படத்தில் விஜய்யுடன் நடித்த ஒரு பிரபலம் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யின் ’லியோ’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் இயக்குனர் மிஷ்கின். இவர் தளபதி விஜய்யை வைத்து ஒரு பான் – இந்தியா படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

எப்போது வேண்டுமானாலும் தான் கேட்டால், உடனே கதை கேட்க விஜய் அப்பாயின்மென்ட் கொடுப்பார் என்றும் ஆனால் சரியான ஸ்கிரிப்ட் இல்லாமல் அவரை அணுகுவது சரியானதாக இருக்காது என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய்யை வைத்து தான் இயக்கப் போகும் படம் ஒரு சிறப்பான திரைக்கதையுடன் இருக்கும், விஜய், அவரது ரசிகர்கள் மற்றும் எனக்கும் கூட அந்த ஸ்கிரிப்ட் திருப்தியுடன் இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ’தளபதி 69’ படத்தை மிஷ்கின் இயக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெண்களை மட்டுமே மையப்படுத்தும் கதைகளில் நம்பிக்கை இல்லை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பகிர்ந்த செமயான தகவல்..

More in Cinema News

To Top