Connect with us

“என் சகோதரர் தல தோனி கையில் பாதுகாப்பாக இருக்கிறார்!” பதிரானா சகோதரி நெகிழ்ச்சி பதிவு!

Ipl 2023

“என் சகோதரர் தல தோனி கையில் பாதுகாப்பாக இருக்கிறார்!” பதிரானா சகோதரி நெகிழ்ச்சி பதிவு!

என் சகோதரர் தல தோனியின் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறார் என்று மதிஷா பதிரானா சகோதரி நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவர் மதிஷா பதிரானா.

இவர் முன்னாள் இலங்கை பந்துவீச்சாளர் மலிங்கா பாணியில் பந்து வீசுவதால் இவரது பந்துவீச்சு எதிர் அணி பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்த இவர் முதல் போட்டியில் முதல் ஓவரில் முதல் பந்திலேயே குஜராத் அணியின் சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீசனில் 10 ஓவர்களுக்கும் மேல் பந்து வீச வரும் பதிரானா, கடைசி நேரத்தில் பேட்ஸ்மேன்களை திணறடிப்பதோடு, விக்கெட்டுகளையும் வீழ்த்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் மதிஷா பதிரானா குடும்பத்தினர் தல தோனியை சென்னையில் சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை மதிஷா பதிரனாவின் சகோதரி விசுவா பதிரானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் ’எனது சகோதரர் தற்போது தல தோனியின் கையில் பாதுகாப்பாக இருக்கிறார். நீங்கள் மதிஷாவை பற்றி எந்த விதமான கவலையும் பட வேண்டாம் என்று அவர் என்னிடம் கூறியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தல தோனி அவர்களை சந்தித்தது மறக்க முடியாத நினைவு’ என்றும் பதிவு செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "விராட் கோலி முதல் நபராக வருவார்… கடைசியாக கிளம்புவார்!" அனுபவங்களை பகிரும் ஜோஷ் ஹேசில்வுட்!

More in Ipl 2023

To Top