Connect with us

மாஸ்டர்செப் நிகழ்ச்சி மீது சட்டப்படியாக அதிரடி நடவடிக்கை எடுத்த தமன்னா…முழு விவரம்

Cinema News

மாஸ்டர்செப் நிகழ்ச்சி மீது சட்டப்படியாக அதிரடி நடவடிக்கை எடுத்த தமன்னா…முழு விவரம்

பிரபல சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர்செப்பின் தமிழ்ல எப்படி விஜய்சேதுபதி தொகுப்பாளரோ ,அந்த மாதிரி தெலுங்கில் நடிகை தமன்னா தொகுத்து வழங்குகிறார். மேலும் இந்த நிகழ்ச்சி நடிகையின் சின்னத்திரை அறிமுகத்தையும் குறித்தது.

Tamannaah shares pic with Vijay Sethupathi from sets of 'Masterchef Telugu'  | The News Minute

திடீரென்று தெலுங்கில் தமன்னா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அனுசுயா தொகுத்து வழங்கி வருகிறார்.எதற்காக தமன்னா நீக்கப்பட்டார் என்ற தகவல் தெரியாமலேயே இருந்தது. தற்போது தமன்னாவின் வக்கீல் தரப்பு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது,

Anasuya replaced Tamannaah for Master Chef

“‘மாஸ்டர் செஃப்’ தெலுங்கு பதிப்புக்கான சம்பள பாக்கி இன்னும் கொடுக்கப்படவில்லை என்பதாலும், தயாரிப்பு தரப்பான இன்னவேடிவ் ஃபிலிம் அகாடமியின் தொழில் முறையற்ற அணுகுமுறையாலும் தமன்னா சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Here are the top 14 contestants from MasterChef Telugu

தயாரிப்பு தரப்பு தொடர்ந்து சம்பளம் தராமல், தொழில் ரீதியாக ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்றாலும் தமன்னா தனது மற்ற வேலைகளை ரத்து செய்துவிட்டு இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியை முடித்துத் தர வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார்.

MasterChef Telugu: Host Tamannaah Bhatia and guest Allu Sirish engage in a  'dosa' contest, watch promo - Times of India

ஆனால் திடீரென்று தயாரிப்பு தரப்பு அவருடனான தொடர்பை நிறுத்திவிட்டது என்பதால் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தமன்னா தள்ளப்பட்டுள்ளார் இவ்வாறு தமன்னாவின் வக்கீல் தரப்பு தெரிவித்துள்ளது.

More in Cinema News

To Top