Connect with us

மாஸ்டர் செஃப்பில் நடந்த ‘எதிரும் புதிரும்’ ….எப்படி தான் இப்படி யோசிக்கிறாங்களோ..?

Featured

மாஸ்டர் செஃப்பில் நடந்த ‘எதிரும் புதிரும்’ ….எப்படி தான் இப்படி யோசிக்கிறாங்களோ..?

மாஸ்டர் செஃப் 13 வைத்து எபிசோடில் கடந்த வாரம் எதிரும் புதிரும் சவால் நடைபெற்றது.ஒரே வாரத்தையில் இந்த டாஸ்கை விளக்க வேண்டுமென்றால் சர்க்கரை பொங்கலுக்கு வடகறி மாதிரி சொல்லணும்.

இந்த நிகழ்ச்சி ஆம்பிக்கும் போதே விஜய்சேதுபதி தோசைக்கு மோர் தொட்டுட்டு சாப்பிடுறத பாத்து ஜட்ஜஸ் கேக்குற மாதிரி ஓப்பனிங்கே கொஞ்சம் மிரட்டுற மாதிரி இருந்தது.

பின்னர் போட்டியாளர்கள் தங்களுக்கான முரணான பொருட்களை தேர்ந்தெடுத்து கொண்டனர் .

  1. கிருத்திகா – கிரேப் ஃப்ரூட் + மொச்சைக் கொட்டை
  2. மணிகண்டன் – மூங்கில் குருத்து + உலர்ந்த ரோஜா இதழ்கள்
  3. சுமித்ரா – வொயிட் சாக்லேட் + பாகற்காய் (வாவ்! செம)
  4. நவ்சீன் – வெண்ணிலா பீன் + பார்லி
  5. தேவகி – ப்ளம் + கொள்ளு
  6. கிருதாஜ் – நெல்லிக்காய் + சேனைக் கிழங்கு
  7. வின்னி – தேயிலை + பர்வல் (ஒருவகையான கோவைக்காய்)
  8. ஆர்த்தி – ஹலீம் விதை + கிளைகோஸ்
  9. நித்யா – உலர்ந்த சோளம் + புளூ சீஸ்
  10. சுனிதா – ராக்கெட் லீவ்ஸ் (அருகுல கீரை) + நார்த்தங்காய் பழம்.

ஒரு வழியா கொடுக்கப்பட்ட 60 நிமிடத்தில் சமைத்த உணவுகளை ருசி பார்த்த Judges ரிசல்ட் படி நித்யா ஏற்கெனவே முதல் வகுப்பில் பாஸாகி பால்கனிக்கு சென்று விட்டார். மீதமுள்ளவர்களில் மூன்று பேர் மட்டுமே பால்கனிக்கு செல்ல முடியும்.

இந்த வரிசையில் டாப் 2 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுமித்ரா. வொயிட் சாக்லேட் + பாகற்காய் என்னும் கடினமான காம்பினேஷனை கையாண்டதால் இந்த தேர்வு. டாப் 3-ல் வந்தவர் கிருதாஜ். “நான்தான் ரெக்கமண்ட் பண்ணி பாஸ் பண்ண வெச்சேன்’’ என்று ஜாலியாக கமென்ட் அடித்தார் விசே. டாப் 4-ல் வந்தவர் கிருத்திகா.

ஆக மீதமுள்ள ஆறு போட்டியாளர்களும் கறுப்பு ஏப்ரனை அணிந்து கொண்டு அடுத்த எபிசோடின் ‘பிரஷர் டெஸ்ட்டை’ எதிர்கொள்ள வேண்டும்.அந்த பிரஷர் டெஸ்ட் என்னவாக இருக்கும் . இந்த வாரம் எலிமினேட் ஆகப் போகிறவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சரி இந்த வாரம் மக்கள் மத்தியில் இடம் பிடித்து சமையலில் அசத்திய டாப் குக்ஸ் யாரெல்லாம் என இனி பார்க்கலாம்

  • நித்யா

  • கிருதாஜ்

  • வின்னி

  • மணிகண்டன்

  • தேவகி

  • சுமித்ரா

  • நவ்சீன்

  • கிருத்திகா

  • சுனிதா
  • More in Featured

    To Top