Connect with us

“Odisha ரயில் விபத்து: தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து!”

Featured

“Odisha ரயில் விபத்து: தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து!”

கொல்கத்தாவில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. இதனிடையே, பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன.

அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. இதை அறியாமல் சிறிது நேரத்தில் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கெனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி, அதன் பெட்டிகளும் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் 233 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் காயமானவர்களை மீட்பதற்கு மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழிதடத்தில் செல்லும் பல ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. மேலும் பல ரயில்கள் வேறு வழிதடத்தில் செல்லும் என அறிவித்துள்ளது. தமிழகத்திலிருந்து சென்னை – ஷாலிமார் ரயில் (12842), கன்னியாகுமரி – ஹவுரா (ரயில் எண் : 1266) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் நாளை (04/06/2023) திருப்பதியிலிருந்து ஹவுரா செல்லும் ரயிலும் (எண் : 20890) ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல், பாலசோர் வழித்தடத்தில் செல்லும் 43 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அழகிய உடையில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் போட்டோஷூட்…

More in Featured

To Top