Connect with us

ஆசிய கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய பெண்.. வரலாறு படைத்த மணிகா பத்ரா..!!

Sports

ஆசிய கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய பெண்.. வரலாறு படைத்த மணிகா பத்ரா..!!

இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனையான மணிகா பாத்ரா, ITTF-ATTU ஆசியக் கோப்பைப் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் தைபேயின் சென் சூ யூவை 6-11, 11-6, 11-5, 11-7, 8-11, 9-11, 11-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

தற்போது உலக தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள பாத்ரா, போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஒரே இந்திய பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார். சேத்தன் பாபூருக்குப் பிறகு சாம்பியன்ஷிப்பின் கடைசி நான்கிற்கு வந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

முன்னதாக, அக்டோபர் 17 அன்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் நம்பர் 7-வது இடத்தில் உள்ள சென் ஜிங்டாங்கை வீழ்த்திய பிறகு பாத்ரா காலிறுதிக்கு முன்னேறியிருந்தார்.

மணிகா ட்விட்டரில் பதிவிட்டு, “உலகின் 7வது நம்பர் வீராங்கனையை வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆசிய கோப்பையில், எனது சிறந்த ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுவேன். மேலும் அடுத்த சுற்றுகளில் கவனம் செலுத்துவேன். சமீபத்தில் சீன வீரருக்கு எதிராக நான் பெற்ற 3வது வெற்றி இது. என்னை ஆதரித்து உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி.” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

Continue Reading
Advertisement
You may also like...

More in Sports

Advertisement
 

Trending

 
Advertisement
To Top